18th Aug 2013
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
(குறள் 480: வலி அறிதல் அதிகாரம்)
Transliteration:
uLavarai
thUkkAdha oppura vANmai
vaLavarai
vallaik keDum
uLavarai – the wealth in possession
thUkkAdha - that which does not increase it
oppuravANmai – such beneficence
vaLavarai – the wealth’s
vallaik – power, strength
keDum – will diminish and perish
The
same thought expressed in the last four verses is once again emphasized though
this verse. Without looking into the ways to make his state wealthier, trying
to benevolent, will diminish the wealth and quickly will deplete the wealth.
Even in beneficience one must be very measured, without which he is sure to
lose all his wealth.
There
are a couple of verses we have seen earlier in the chapters on Benfience and
societal conformance speaking, advocating exactly the opposite thought.
(“oppuravinAl varum kEDenin…) and (sAdhalin innAdhadhu illai…). Perhaps they
are said in the context of individually wealthy people and this verse is said
in the context of ruler. Regardless, even within this chapter, it is more of
repetition of the same thought without much differently said. None can argue,
that he had to cover every little aspect in a verse. But the very reason for
Thirukkural is to be brief and effective.
“Being philanthropic without
due assessment of state of wealth
will bring down the same
quickly, destroy states financial health”
தமிழிலே:
உளவரை - தனக்கு உள்ள செல்வத்தினை
தூக்காத - ஏற்றாத (கூட்டாத)
ஒப்புரவாண்மை - பிறர்க்கு ஈயும் பண்பினால்
வளவரை - செல்வத்தின்
வல்லைக் - வலிமை (விரைந்து)
கெடும் - குன்றும், அழியும்
கடந்த நான்கு குறள்களின் கருத்தை மீண்டும் வலியுறுத்துகிற குறள்
இது. தன்னிடம் உள்ள செல்வத்தை மேலும் கூட்டாது, பிறர்க்கு உதவுகிற ஈகைக் குணமானது,
தம்மிடம் உள்ள செல்வத்தின் வலிமையைக் குறைத்து, அழித்தும் விடும். ஒப்புரவாண்மையும்
உணர்ந்தே ஒருவர் ஆற்றவேண்டும். ஒருவர் செல்வத்தைப் பெருக்காமலே ஈகையிலே ஈடுபட்டால்,
விரைந்து அவர் செல்வத்தின் வலிமை குன்றி அழிபடும். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்றும் தமக்கு விஞ்சிதான் தானமும் தருமமும் என்று கேள்விப்படுகிறோம் அல்லவா?
வள்ளுவரே இக்குறளை மறுத்ததாகக் கூறும் குறள்களுமுண்டு. “ஒப்புரவி னால்வருங்
கேடெனின் அஃதொருவன்
லிற்றுக்கோட் டக்க துடைத்து” என்றும், “சாதலின் இன்னாத தில்லை யினிததூஉம்
ஈத லியையாக்
கடை” என்றூம் ஒப்புரவு ஒழுகுதல், மற்றும் ஈகை அதிகாரங்களில் வள்ளுவர் கூறியுள்ளார்.
முரண்பட்ட கருத்துக்களைப் போல் தோன்றினாலும், மேற்கண்ட குறள்கள் தனிமனிதர்களுக்கு விதிக்கப்பட்டவை
என்றும், இவ்வதிகாரத்தின் குறள் ஆளுவோருக்கும் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம்..
இன்றெனது குறள்:
தன்வளத்தை ஏற்றாசெய் ஈகையே தன்வளத்தைப்
புன்மையில் போக்கி விடும்
thanvaLaththai ERRAsei IgaiyE thanvaLAththaip
punmaiyil pOkki viDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam