17th Aug 2013
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
(குறள் 479: வலி அறிதல் அதிகாரம்)
Transliteration:
aLavarindhu
vAzhAdhAn vAzhkkai uLapOla
illAgith
thOnRAk keDum
aLavarindhu – the limits of what his wealth is
vAzhAdhAn – not knowing
vAzhkkai – such persons life
uLapOla – appear as if everything is there
illAgith – but in reality nothing is there
thOnRAk – eventually even such an appearance will not be there
keDum – and be in ruins
An often quoted one, this verse is about a very
simple thought of knowing ones own limits in life to live the life
successfully. A person should live based on his wealth and earnings. If he
cannot do that then he will have a false sense of having everything (in reality
might have lost everything too) and eventually, even such false sense will
vanish and his living will render him in ruins.
If
one lives the life, not knowing what his limits are based on own wealth
It
gives false sense of having, finally really not having any, but minds’ myth.
தமிழிலே:
அளவறிந்து - தம்மிடம் உள்ள செல்வத்தின் அளவினை அறிந்து
வாழாதான் - அதற்கேற்ப வாழாதாரது
வாழ்க்கை - வாழ்க்கையானாது
உளபோல - எல்லாம் இருப்பது போன்ற பொய்த்தோற்றத்தை அவருக்கு அளித்து
இல்லாகித் - அது உண்மையிலே இல்லாமலிருந்தாலும்
தோன்றாக் - பிறகு அக்காட்சியும் பிழையாகிப்
போய்
கெடும் - கெடும்.
இக்குறளின் கருத்து மிக எளிமையானது. பொதுவாக மேற்கோளாகக்
காட்டப்படும் ஒன்றும் கூட. ஒருவன் தன்னிடம் உள்ள செல்வத்துக்கு ஏற்றவாறு வாழ வேண்டும்.
அவ்வாறு வாழாதவனுடைய வாழ்க்கையானது எல்லாம் இருப்பதுபோல பொய்த்தோற்றத்தை அளிக்கும்
அவருக்கே. பிறகு அப்பொய்த் தோற்றமும் அழிந்துபோய், காட்சிப்பிழையெனவே ஆகிக் கெடும்.
இன்றெனது குறள்:
உள்ளபோல் தோன்றுமாயின் உள்ளதன் எல்லையை
உள்ளிவாழார்
வாழ்வு கெடும்
uLLapOl
thOnRumAyin uLLadhan ellaiyai
uLLivAzhAr
vAzhvu keDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam