21st Aug 2013
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(குறள் 483: காலமறிதல் அதிகாரம்)
Transliteration:
Aruvinai
yenba uLavO karuviyAn
kAlam
aRindhu seyin?
Aruvinaiyenba –This is difficult to do
uLavO – is there such a deed?
karuviyAn – when using appropriate apparatus, tool including thinking apparatus)
kAlam
aRindhu – knowing the appropriate time to do things
seyin? – and do it?
This verse asks if there is anything impossible for
somebody who acts with appropriate tools and understanding the right time to
do. The tools mentioned here mean both mindware and materialware.
Parimelazhagar lists three types of traits and four different ways to
collectively denote the “tools” or “apparatus”. What would they be?
Intellect, valor and pride are the three traits that
are important tools. Intellect is the thinking apparatus; valor is the courage
to act; pride is the rightful happiness about accomplishing something. The four
different ways are, “sama, bedha, dhaana and dhanDa” – respectively to speak
nice words, words of peace; shut the people out or scare tactics; by gifiting
and giving incentives; and punish if other methods don’t work.
With these tools, nothing should be impossible for
anyone to accomplish what they set out to do, provided timing is also right.
This is what is emphasized in this verse.
“Is
anything impossible to accomplish, when done in time,
using right tools of mind and material, and
success as aim”
தமிழிலே:
அருவினையென்ப - இது செய்வதற்கு அரியது என்று
உளவோ - சொல்லக்கூடிய ஒன்றும் உண்டா?
கருவியான் - தக்க கருவிகளால் (அறிவு என்னும் அகம் மற்றும் புறக்
கருவிகளால்)
காலம் அறிந்து - இது இன்னது செய்ய தகுந்த காலம் என்பதை அறிந்து, உணர்ந்து
செயின்? - செய்யும் போது!
இக்குறள் காலமறிந்து தக்க கருவிகளினைக்
கொண்டு காரியமாற்றுவோருக்கு செய்வதற்கு அரியதென்று ஏதேனும் உள்ளனவா என்று கேட்கிறது.
கருவிகள் என்பதை அகம் மற்றும் புறம் சார்ந்த கருவிகளென்று கொள்ளலாம். பரிமேலழகர் கருவிகளாவன
மூவகை ஆற்றலும், நால்வகை உபாயங்கள் (வழி முறைகள்) என்கிறார். அவை என்ன?
அறிவு, ஆண்மை, பெருமை என்பன ஆற்றல்கள்.
அறிவும் என்பது எண்ணுதலுக்கும், ஆராய்தலுக்கும் தொடர்புடைய கருவி. ஆண்மை, செயல் துணிவுக்கான
ஆற்றலாகிய கருவி. பெருமை என்பது, ஒரு செயலைச் செய்வதால் இன்னவை சாதிக்கப்படும், அது
எம்மாலே முடியும் என்கிற சுய மதிப்பீட்டில் கொள்ளும் உவகை; இதுவும் கருவியே. சாமம்,
பேதம், தானம், தண்டம் என்பவை நான்கு வகையான வழிமுறைகள். அவை இன்சொலும், தன்மையாகப்
பேசி செயலாற்றலும்(சாமம்), செயலூக்கிகளாக சிலவற்றைக் கொடுத்தல்(தானம்), ஒதுக்கிவைத்தல்,
மிரட்டிப் பணியவைத்தல்(பேதம்), தண்டனையைக்
கொடுத்து திருத்துதல்(தண்டம்) போன்றவையேயாகும். செயலாற்றலுக்கான கருவிகள் இவைகளே ஆயினும்,
கருவிகளோடு, தக்க காலமும் அமைந்தாலே இவையும் பயனளிக்கும்.
இன்றெனது குறள்:
உற்ற
கருவிகளால் காலத்தே செய்வோர்க்கு
சற்றும் உளதோ அரிது?
uRRa karuvigaLAl kAlaththE seyvOrkku
chaRRum uLadhO aridhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam