ஆகஸ்ட் 13, 2013

குறளின் குரல் - 482


13th Aug 2013

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
                          (குறள் 475: வலி அறிதல் அதிகாரம்)

Transliteration:

PIlipei sAkADum achchirum appaNDanj
ChAla miguththup peyin

PIli - feather
pei - loaded
sAkADum – the wheels (fitted carts)
achchirum – will break the axle of the cart
appaNDanj -  if the feathers
ChAla - more
miguththup – too much as a load
peyin – loaded in to vehicles.

This verse uses a metaphor to exemplify the importance of knowing one’s own strength. If someone thinks that he or she is strong compared weaker opponents, a number of such weak opponents together can and will out do the strong person. Though a single feather is almost weightless, an excessive load of the same in a cart can even break the axle of the cart is the metaphor used to drive home the point.

In the commentary of previous KuraL, a pazhamozhi nAnUru poem was cited as an example. The last two lines of the same poem are applicable in the context this kuraL verse. Even if the surrounding enemies are weaker in strength, there is no better strength with a good many of them together against a strong person.

“Though light in weight, may in big numbers, feather
can break even the axle of a cart, for strong to wither”

தமிழிலே:

பீலி - இறகினை
பெய் - ஏற்றிய
சாகாடும் - சகடம் (சக்கரங்கள்) பொருத்தப்பட்ட வண்டியும்
அச்சிறும் - தன்னுடைய அச்சு முறியப்பெறும்
அப்பண்டம்- அவ்விறகுகளை
சால - பெருமளவில்
மிகுத்துப் -மிகுதியாக
பெயின் - ஏற்றினால்

இக்குறள் ஒரு உவமையைச் சொல்லி, வலியறிதலை வலியுறுத்துகிறது. ஒருவர் தாம் வலிமையோடு இருக்கிறோம், நமக்கு எதிரே இருப்பவர்கள் எல்லாம் வலியற்றவர்கள் என்று எண்ணினால், பல வலியற்றவர்கள் ஒன்று கூடி வலிமையோடு இருப்பவரை வென்றுவிட முடியும். இதையே, ஒரு இறகு சுமையில்லாமல் இருந்தாலும், பல இறகுகளை பெருமளவில் மிகுதியாக ஏற்றிய வண்டியின் சக்கர அச்சும் முறிந்துவிடும், என்று ஒரு உவமையைச் சொல்லி அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

கடந்த குறளுக்கு மேற்கோளாகக் காட்டப்பட்ட பழமொழி நானூறுபாடலின் முழுவடிவம் இங்கே! முதல் இரண்டு வரிகள் சென்ற குறளுக்குப் பொருந்தியதைப்போல, இறுதி இரண்டு அடிகள் இக்குறளுக்குப் பொருந்தி வருகின்றன.

ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்.

சூழ்ந்த பகைவர் வீரத்தில் நன்றிலாராயினும், அவர்கள் பலராயிருப்பதைவிட வலிமையொன்றும் இல்லை என்று சொல்லும் இப்பாடலின் வரிகள், இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

இன்றெனது குறள்:

சுமையில் இறகும் மிகுந்தால் முறிக்கும்
சுமையாகும் வண்டியச்சுக் கு

sumaiyil iRagum migundhAl muRikkum
sumaiyAgum vaNDiyachuk ku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...