ஆகஸ்ட் 12, 2013

குறளின் குரல் - 481


12th Aug 2013

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
                          (குறள் 474: வலி அறிதல் அதிகாரம்)

Transliteration:
AmaindhAn gozhugAn aLavaRiyAn thannai
ViyandhAn viraindhu keDum

AmaindhAng(u) – the company of people that add to strength (intellectual, physical)
ozhugAn - Those who do not seek and get such company
aLavaRiyAn – does not understand what personal strengths (self lapses)
thannai viyandhAn – yet being proud of self (and thus arrogant)
viraindhu keDum – will be in ruins speedily

This verse is applicable to everyone, especially for the rulers. Those who do not have the kinship of others that add strength to them, not have the slightest understanding of their own strengths,  and also in excessive self-pride (for no merit in fact) will face ruin speedily. Parimelazagar, explains “amaindhAngu ozhugAn” as applicable to rulers who do not understand the strength of rulers of other states in comparison and keep friendship with rulers that are stronger. Such attitude would only bring ruins to a ruler.

Self-pride and admiration in general are not a good qualities. Only weak, ignorant and arrogant would swim in such vein pride.  Even the most valorous one must not self trumpet his valor and be in fight with undeserving opponents or with those whose strengths are not known.

In Kambaramaayanam, Kambar says about the destruction of people with self-pride in couple of places – “nenjam tharukkinAr keDuvarennum thaththuvam”, “kaLiththavar keDudhal thiNNam

For indulgent, in self praise with pride, seeking no kinship, not knowing
others strengths and ingorant of self, swift destruction sure is ensuing”

தமிழிலே:
அமைந்தாங்கு - தமக்கு வலிமை சேர்க்கக்கூடியவர்களோடு
ழுகான் - சேர்ந்து பழகாது, இயைந்து நடவாதவன்
அளவறியான் - தானும் தனக்குள்ள வலிமை இன்னதென்றும் அறியாதவன்
தன்னை வியந்தான் - தன்னைப்பற்றி மிகவும் உயர்வாக எண்ணி பெருமிதத்தில் விதந்து போகிறவன்
விரைந்து கெடும் - வேகமாக அழிவை நோக்கிச் செல்லுவது உறுதி

இக்குறள் பொதுவாக எல்லோருக்கும், குறிப்பாக ஆளுவோருக்கும் சொல்லப்பட்டது. தமக்கு வலிமைச் சேர்க்கக்கூடியவர்களின் அணுக்கத்தை கொள்ளாதவன், தமக்குறிய வலிமையும் அது இன்மையும் இன்னவையென்று அறியாதவன், தவிரவும் தன்னைப்பற்றி தற்பெருமை கொண்டு சுயபாராட்டிலே திளத்திருப்பவன் எவனோ, அவன் வேகமாக அழிவுப்பாதையில் சென்று கெடுவான். பரிமேலழகர் “அமைந்தாங்கு ஒழுகான்” என்று பிறநாட்டு ஆளுவோர்களோடு பொருந்தி வாழாதவர்களைக் குறிக்கிறார். ஆளுவோன்,தனக்கும் வலியிலாது, பிறநாட்டு ஆள்வோர்களின் வலிமையும் தெரியாது பகைகொண்டு ஒழுகுபவனாயிருப்பின் விரைந்து அழிவது உறுதிதானே?

பழமொழிப்பாடல் தன்னையே வியப்போரைப்பற்றி, “ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க” என்னும். பொருந்தார் தம்மோடு பொருதும் போது தம்முடைய வீரத்தை தானே மெச்சிக்கொண்டு, போரில் ஈடுபடுதல் நன்றன்று என்னும் பொருளில் சொல்லப்படுவது.

கம்பராமாயண மாரீசன் வதை படலத்தில், “அரக்கனஃ து உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் தருக்கினார் கெடுவரென்னும் தத்துவம் நிலையிற்றன்றோ?” என்கிறார் கம்பர். சம்பாதி படலத்திலே மேலும், “ களித்தவர் கெடுதல் திண்ணம்” என்று உறுதியாகக் கூறுகிறார்.

இன்றெனது குறள்:

தக்கார் உறவிலான் தம்வலியும் தானறியான்
மிக்கானாய் எண்ணிக்கெ டும்
ThakkAr uRavilAn thamvaliyum thAnaRiyAn
MikkAnAi eNNikke Dum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...