ஆகஸ்ட் 08, 2013

குறளின் குரல் - 477


 8th Aug 2013

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
                          (குறள் 470: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliteration:
eLLAdha eNNich seyalvENdum thammODu
koLLAdha koLLAdu ulagu

eLLAdha – Without being the subject of blame or redicule of the world
eNNich – one must think and
seyalvENdum – do the deeds
thammODu – (because) for the nature and ways of the world, or the person doing the deed
koLLAdha – acts contrary to the individual (an ordinary person or a ruler)
koLLAdu – (what is done) will not accept or approve
ulagu – this world

Though this last verse of the chapter is applicable in general to everyone, to the rulers it  is even more important. An individual’s blame, redicule, will be his own and does not have any impact to others or the world; but, a ruler’s deeds tha bring blame, redicule will affect the whole nation. When a ruler does not do deeds that befit ruler’s disposition and stature, the world will not kindly take it; will be very unhappy. Hence a ruler must rule without the blame and redicule by his citizens.

“World will not accept that which does not befit the nature of disposition
One must do that which world does not redicule, with thoughtful decision”

தமிழிலே:
எள்ளாத - உலகம் பழிக்காத வகையில்
எண்ணிச் - ஆராய்ந்து
செயல்வேண்டும் - செயலாற்ற வேண்டும்
தம்மோடு - (ஏனெனில்) தம்மியல்புக்கு (உலகோர் பொது இயல்புக்கு) அல்லது செய்பவர் இயல்புக்கு
கொள்ளாத - ஒவ்வாதவற்றுக்கு
கொள்ளாது - ஒப்பாது, உவக்காது
உலகு - இவ்வுலகம்

இவ்வதிகாரத்தின் இறுதிக்குறளான இக்குறள் எல்லோருக்கும் பொருந்துவதாயினும், ஆளுவோருக்கு இன்றியமையாததாம். ஏனெனின் தனியொருவரின் பழியும் கேலியும் அவருடனே தீரும். ஆனால் ஆள்வோரின் பழி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதிக்கும், பழிக்காளாக்கும், கேலிக்கு உரியோராக்கிவிடும். ஆள்வோர்க்கென்று சொல்லப்பட்ட இயல்புகளுக்கு ஒவ்வாதவற்றை செய்தால் உலகம் உவந்து ஏற்காது. எனவே உலகம் பழிக்காத, கேலிபேசாத வகையிலே ஆளுவோர் தம் செயல்களைச் செய்யவேண்டும்.

இன்றெனது குறள்:

உலகொவ்வாச் செய்தால் உவக்கார் உலகோர்
உலகொப்ப செய்கவா ராய்ந்து

ulakovvAch seydhAl uvakkAr ulagOr
ulakoppa seygavA rAindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...