ஆகஸ்ட் 07, 2013

குறளின் குரல் - 476


7th Aug 2013

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
                          (குறள் 469: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliterartion:
nanRARRa luLLundh thavaRuNDu avaravar
paNbaRin dhARRAk kaDai

nanR(u) ARRauLLundh - - Even when executed well the intended deed (good too)
thavaRuNDu – that may become a mistake
avaravar – without understanding each one’s
paNbaRindh(u) – understanding qualities, dispositions, need for what is done
ARRAkkaDai – if not done that way.

Even if executed well, unless knowing the qualities of a person, disposition and what needs done of that person, it may end up being wrong for the person. This is how most of the commentaries interprete this verse.

Deeply looking, this verse could be interpreted at personal level too for everyone. When someone does not understand what his personal qualities and capabilities are, what is good or bad for him, even if executed well, a deed may end up being wrong for him.

Perhaps vaLLuvar intended the meaning to be so and deliberately left the interpretation of context to individuals.
Without an assessment of qualities of a person, deeds done
For him, by him even if done well may be wrong, erron prone.”

தமிழிலே:
நன்று ஆற்றலுள்ளுந் - நன்மையே நினைந்து நன்றாக செய்தாலும்
தவறுண்டு - அதுவும் தவறாகிப் போகலாம்
அவரவர் - ஒவ்வொருவரின்
பண்பறிந்(து) - பண்பினையும் அறிந்து, இவருக்கு இன்னது உகந்தது அல்லது அன்று என்றறிந்து
ஆற்றாக் கடை. - செய்யாவிட்டால்

இன்றைய குறள் இன்னார்க்கு இது உகந்தது என்று அறிந்து செய்தலே நன்றென்று சொல்கிறது, செய்வதை நன்றாகச் செய்தாலும், நன்மையே செய்தாலும். இது பொதுவாக எல்லோரும் சொல்லுகிற பொருளாகும்.

ஊன்றி நோக்கினால் இதை ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கே சொல்லப்பட்டதாகவும் கொள்ளலாம். ஒருவர் ஒரு செயலை நன்றாகச் செய்தாலும், தவறு ஏற்படலாம், அவர் தம்முடைய இயல்பு இன்னது, தம்மால் இது முடியத்தக்கது என்பதை உணர்ந்து செய்யவில்லையானால்.

வள்ளுவர் இதை இவ்விதம் இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்படியாகவும் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.  இரண்டாவது பொருளுக்காவும் ஒரு குறளை எழுதினால், குழப்பம் தவிர்க்கலாமென்று இன்று இரண்டு குறள்கள்!

இன்றெனது குறள்(கள்):

நன்கொருவர் பண்பறிந்து செய்யாத நன்மையும்
பொன்றிடும் குற்றமாக லாம்

nangoruvar paNbaRindhu seyyAdha nanmaiyum
ponRiDum kuRRamAga lAm

தன்பண்புக் கொப்பச் செயலாற்றான் செய்கைகள்
நன்றெனினும் பொன்றிக்கெ டும்

thanpaNbuk koppach seyalARRAn seygaigaL
nanReninum ponRikke Dum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...