6th Aug 2013
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
(குறள் 468: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)
Transliteration:
Arrin
varundhA varuththam palarninRu
pORRinum
poththup paDum
Arrin – while doing a deed
varundhA – trying without thinking of repurcussions
varuththam – effort ( the deeds done by that)
palar
ninRu – even if many well meaning people stand as support
pORRinum – and help out
poththuppaDum – will ruin with defects and blemishes
Deeds that start without
thinking and serious efforts will fold eventually, though many well meaning
people may help. What this verse indirectly suggests is proper planning, and
efforts to execute. There are two verses in Pazhamozhi nAnURu stressing this
thought.
The first one says, wisemen
will think about the feasibility of doing a deed, seek the help of right people,
assess the usefulness of the deed before venturing into it.
The second verse talks
about how Chola Sembian destroyed demons’ cities to aid heavenly beings. In
doing so, the impossibility of the task and the effort with which the Chola
king accomplished it are cited by an allegory – “the arrow sent strongly will
break even the strong body armor”, implying, if the effort is strong, even the
impossible can be accomplished.
“In doing a deed, if proper effort is not there
Even with many to help, it will end in despair”
தமிழிலே:
ஆற்றின் - செயலாற்றும் போது
வருந்தா - முறையாக முயலாமல் செய்கின்ற
வருத்தம் - முயற்சி (அதால் செய்யப்படும்)
செயல்
பலர்நின்று - துணை நிற்க நலம் நாடுவோர் பலர் இருந்து
போற்றினும் - உதவிடினும்
பொத்துப்படும் - குறைவு பட்டுக் கெடும்
முறையாக தொடங்கி முறையாகச்
முயற்சி செய்யாத எச்செயலும் முன்னிற்று உதவ எத்துணைபேர் இருந்தும் முடங்கிக்போய்விடும்
என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. இக்குறள் வலியுறுத்துவது முறையான திட்டமிடல், ஒரு செயலைச் செய்யச் செய்கின்ற தக்க முயற்சி இவையே. பழமொழிப் பாடல்களிரண்டு இக்கருத்தையொட்டியன.
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.
அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின்
தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர்.அங்கனமின்றி,
முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது
மேற்கண்ட பாடல்.
வீங்கு தோள் செம்பியன் சீற்றம்
விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால்,
ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க
தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண்.
மேற்கண்ட பாடல் சோழன் செம்பியன்
தேவர்களுக்காக அசுரர்களின் ஊரினை அழித்ததைச் சொல்லி, அம்பினை வலிவாகத் தொடுத்தால் கவசமும்
பிளந்துவிடும், அதுபோல முடிந்த அளவு முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற கருத்தைச்
சொல்லுகிறது. இப்பாடல் முயற்சியை முன்னிருத்திச் சொல்லப்பட்டது.
இன்றெனது
குறள்:
செய்வழி ஆய்ந்துசெய் யாச்செயல் பல்லோர்நின்
றுய்த்தாலும் பொன்றிக் கெடும்
seivazhi Ayndhusey
yAchcheyal pallOrnin
RuiththAlum ponRik keDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam