5th Aug 2013
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(குறள் 467: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)
Transliteration:
eNNi
tuNiga karumam thuNindhapin
eNNuvam
enbadhu izhukku
eNNi - Think
tuNiga – and act
karumam – to do any deed
thuNindhapin – after venturing into a deed
eNNuvam
enbadhu – the attitude to think later
izhukku – is iniquity,
disgrace
Before venturing to do a deed, one must
definitely, deeply think over the reason to do it, the benefits out of such a
deed, advantages, disadvantages, the proper steps to do it, possible obstacles
and the ways to resolve the same. Not doing so, will only bring disgrace to the
person who ventures.
In Kambaraamyanam, in the chapter of JatAyu’s
demise, Kamban says through the words of JatAyu this: O’ foolish RavanA, you
have done a mistake. One who is the mother of the universe, what did you think
of her? O’ thoughtless! Who is you support base now? – The underlining emphasis
is that RavaNA ventured into abducting SIthA without thinking through the
repurcussions; because of which he lost everything and eventually his life too.
“Think before doing a deed
Else disgrace befalls indeed”
தமிழிலே:
எண்ணித் - ஓருவன் நன்றாக ஆராய்ந்து
துணிக - முனையவேண்டும்
கருமம் - ஒருவர் ஒருசெயலைச் செய்ய
துணிந்தபின் - முனைந்து தொடங்கிய பின்னர்
எண்ணுவம் என்பது - ஆராய்வோம் என்று எண்ணுவது
இழுக்கு - ஈனமும், தாழ்வையும் தந்துவிடும்.
ஒரு
செயலைச் செய்ய முனைவதற்கு முன்பு, அச்செயலைச் செய்ய வேண்டியதற்கான தேவை, அதனால் உறும்
பயன்களின் நன்மைகள், தீமைகள், அச்செயலைச் செய்வதற்கான வழிமுறைகள், ஏற்படக் கூடிய இடையூறுகள்,
எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து பின்னரே அச்செயலிலிறங்க வேண்டும். செய்தபின் சிந்திப்போம் என்பது இழுக்கையே, ஈனத்தையே தரும். எண்ணாமல் இராவணன் செய்த செயலை
சடாயு கூறுவதாக அமைந்த கம்பராமாயணப்
பாடல், சடாயு உயிர்நீத்த படலத்தில் வருகிறது. அப்பாடல்,
பேதாய்! பிழை செய்தனை; பேர்
உலகின்
மாதா அனையாளை மனக்கொடு,
நீ
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ?
இராவணா, பேதையே நீ பிழை செய்து விட்டாய். இந்த உலகுக்கு
எல்லாம் தாய் போன்றவளை, நீ உன் மனத்தில் என்ன என்று நினைத்தாய்? எண்ணம் இல்லாதவனே,
உனக்கு இனிமேல் யார் ஆதாரம்? - என்று இராவணைனி எண்ணித் துணியாமையை சடாயு வாயிலாகக்
கம்பன் கூறுகிறான்.
இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், பாரதியின்
நவராத்திரிப் பாடலின் தொடக்கப்பாடலுக்கான சொல், எதுகை அமைப்புக்கான ஊக்கி எங்கிருந்து
வந்தது என்பது புரியும். அப்பாடல் இது.
மாதா பராசக்தி வையமெலாம்
நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப்
பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய்
எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து
வாழ்வோமே
இதை
இங்கு குறிப்பிடுவதற்குக் காரணமும் உண்டு. எண்ணாமல் பாரதி எடுத்தாண்ட சொற்கள் அல்ல
இவை. கம்பனின் சொல்லாடல் சிறப்பை எண்ணி அதைப் பொருத்தமாக பயனாக்கிக்
கொள்ள எண்ணித்துணிந்த கருமமே இது.
இன்றெனது குறள்:
ஆய்ந்துசெயல் ஆற்றுவீர் ஆற்றியபின் ஆய்வமெனல்
சாய்த்துவிடும் ஈனமே தந்து
Ayndhuseyal ARRuvIr ARRiyapin Ayvamenal
sAitthuviDum
InamE
thandhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam