ஆகஸ்ட் 04, 2013

குறளின் குரல் - 473


4th Aug 2013

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
                          (குறள் 466: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliteration:
Seythakka alla seyakkeDum seythakka
seyyAmai yAnung keDum

Seythakka alla – The deed that are never to be done
Seyak – by doing them
keDum – disaster will befall
seythakka – whatever should be done
seyyAmaiyAnung – by not doing them also
keDum – disaster will befall

The verse says the obvious. If a person does deeds that must not be done, sure disaster will befall on him. Similarly, if the person does not do deeds that must essentially be done, then alsio disaster will befall on him.

What deeds must not be done? Deeds that do not require great big efforts, that which do not yield any good to anyone, things that are doubtful, causing misery to self and others are deeds to be avoided. Deeds that must be done are, opposite of the above list and those that do not display valor, pride and wisdom are not to be done.

“Not doing that which must be done will only bring disaster
  Doing deeds that must not be done will also bring disaster”

தமிழிலே:

செய்தக்க அல்ல - எச்செயல்களைச் செய்யக்கூடாதோ
செயக் - அவற்றைச் செய்வதனால்
கெடும் - அழிவு வரும்
செய்தக்க - எவற்றை ஒருவர் கட்டாயமாக செய்ய உகந்தவையோ
செய்யாமையானுங் - அவற்றை செய்யாமல் இருந்தாலும்
கெடும் - அதனாலும் அழிவு வரும்.

இந்த குறள் எல்லோருக்கும் நன்றாக புரியக்கூடிய, தெரிந்த ஒன்றைத்தான் சொல்கிறது. ஒருவர் செய்யக்கூடாத செயல்களைச் செய்வதால் அழிவைதான் அடைவார். அதேபோல செய்யக்கூடியவற்றைச் செய்யாமலிருந்தாலும், அழிவையே அடைவார்.

இவ்வாறு சொல்லுகையில், எந்தவிதமான செயல்கள் விலக்கத்தக்கவை என்ற கேள்வியும் எழுவது இயற்கை. மிக்க முயற்சி தேவையில்லாதவையும், பெரிய அளவில் பயன் தராதனவும், ஐயத்துக்கிடமானவையும், துன்பத்தைத் தருவனவும் விலக்கப்படவேண்டியவை! இவற்றுக்கு எதிர்மறையானவை எல்லாம் செய்யத்தக்கவை. தவிர ஆண்மை, பெருமை, அறிவு இவற்றை எல்லாம் கொள்ளத்தக்க செயல்களை செய்யாமல் போவது, அழிவைத் தரக்கூடியன.

இன்றெனது குறள்:

கூடாமை செய்வாரும் வேண்டியன செய்யாரும்
கேடால் அழிந்தொழி யும்

kUDAmai seyvArum vENDiyan seyyArum
kEDAl azhindhozhiyum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...