48:
(Understanding the strength - வலி அறிதல்)
[This chapter is
about understanding or judging the strength of self and others before venturing
into an act or task. The task could be as simple as a public welfare project or
as demanding as expanding the nation with the might of an army. In either case,
a ruler must be able to judge, own strength to carryout what was initiated and
also know the strength of people that help out in carrying out and the possible
obstacles from unexpected quarters. Also if it is a situation against someone,
knowing the strength of an opponent is equally important to plan accordingly.]
9th Aug 2013
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
(குறள் 471: வலி அறிதல் அதிகாரம்)
Transliteration:
Vinaivaliyum
thanvaliyum maRRAn valiyum
thuNaivaliyum
thUkkich cheyal
Vinaivaliyum – The difficulty and the effort required of the deed undertaken
thanvaliyum – The ability of self to handle it successfully
maRRAn valiyum – Ability of enemies that can ruin, prevent or even
destroy the effort
thuNaivaliyum – the ability of people that come as support to successfully help on
either side
thUkkich cheyal – one must check the balance of all these and get down to
do the task
This first verse of the chapter says about all that
one has to look at before commencing to do a task. This is similar to another
popular verse from the last chapter, “eNNIth thuNiga karumam”.
What are the things one must think about before
venturing to some thing. One must know the difficulty and complexity of the
task at hand and the effort required for that; must know his own strength to
tackle challeges of the task; must be able to understand the obstacles or
schemes to ruin by the potential and existing enemies; also must understand the
support on either sides of self and the opponents and then only venture into
doing the task. If all these are looked into carefully and if the combined
strength on the side of self, weighs more than the competing strengths on the
opposite side, one can venture in to what one plans to do.
As earlier cited from Pazhamozhi nAnURu, wisemen
will look at the self, support and the benefit of doing something. If someone
does not follow this simple rule, and does whatever, in whichever ways. It
would end up being something other than what was anticipated.
“Toughness
of task, ability of self, enemies might to spoil
Support
of either side allies, one must consider not to foil”
தமிழிலே:
வினைவலியும் - செய்கின்ற செயலுக்குத் தேவையான முயற்சியின் கடினம்
தன்வலியும் - தம்மால் அவற்றை கையாளுகிற திறமை
மாற்றான் வலியும் - எதிரிகளுண்டாயின் அவர்களது வலிமையும் (தடுக்க/கெடுக்க/அழிக்கக்
கூடிய)
துணைவலியும் - இருபக்கமும் உறுதுணையாக
இருப்பவர்களது செயலாற்றும் திறமையும்
தூக்கிச் செயல் - ஒருவர் சீர்தூக்கிப் பார்த்து
ஒரு செயலில் இறங்கவேண்டும்
இவ்வதிகாரத்தின் முதற்குறளான இக்குறள்
ஒரு செயலைச் செய்யத்தொடங்குவதற்கு முன் நோக்க வேண்டியவற்றைச் சொல்லுகிறது. சென்ற அதிகாரத்தில்
சொல்லப்பட்ட “எண்ணித் துணிகக் கருமம்” என்ற குறளின் கருத்தை ஒட்டியதே இக்குறள்.
எவற்றையெல்லாம் எண்ண வேண்டும் என்பதைப்
பட்டியலிடுகிறது. ஒருவர் செய்யப்படவேண்டிய செயலுக்கு தேவையான முயற்சியையும் அதன் கடினத்தையும்
அறியவேண்டும்; அச்செயலைத் தம்மால் செய்யமுடியுமா என்று சிந்திக்கவேண்டும்; அச்செயல்
செய்ய தடங்கல்களும், இடையூறுகளும் செய்யக்கூடிய பகை நிலையில் உள்ளவர்களின் திறமையையும்,
அவர்கள் முயற்சியின் வலிமையையும் அறிந்திருக்கவேண்டும். தவிரவும் தம்மிடத்திலும் பகையிடத்திலும்
உள்ள அவரவர்க்கு துணையாக இருப்பவர்களது திறமைகளையும் அறிந்திருக்கவேண்டும்.
இக்குறளுக்கும் இயைந்த, சென்ற அதிகாரத்தில்
மேற்கோளாகக் காட்டப்பட்ட பழமொழிப் பாடல் மீண்டுமொருமுறை.
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.
அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின்
தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர்.அங்கனமின்றி,
முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது
மேற்கண்ட பாடல்.
இன்றெனது குறள்:
ஆற்றும் வினைதுணை உற்றார் எதிரிவலி
தேற்றல் வினைக்கு வலி
ARRum
vinaithuNai uRRAr edhirivali
thERRal
vinaikku vali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam