ஜூலை 27, 2013

குறளின் குரல் - 465

27th July 2013

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
                      (குறள் 458: சிற்றினம் சேராமை அதிகாரம்)

Transliteration:
Mananalam nanguDaiya rAyinum sAnROrkku
Inanalam EmAp puDaiththu

Mananalam – health of mind
Nangu uDaiyarAyinum – Even if is good
sAnROrkku – (even) for learned
Inanalam – the right companionship of like-minded scholars
EmApp(u) uDaiththu – gives the shield of safety and security

Another verse to do with healthy mind and good companionship as the central theme. Only a good companionship will serve as a safety and security net, even the scholarly that have healthy mind. Though he has used a short for verse technique to convey his thoughts, some times, he goes in circles to say the same thing over and again. Ten verses for this chapter is definitely an excess.

“Though blessed with healthy mind, even for the learned
 It is imperative to have the companionship of great earned”

தமிழிலே:
மனநலம் - மனமானது நல்வழிகளில் பண்பட்டிருத்தல்
நன்குடையராயினும் - நிரம்பவே பெற்றிருந்தாலும்
சான்றோர்க்கு - அவர்கள் சான்றோர்களாகவே இருந்தாலும் (கல்வி கேள்விகளில் சிறந்தோர்)
இனநலம் - அவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டம் (அறவழியும் அறிவுச் செறிவும் பெற்றவர்கள்)
ஏமாப்புடைத்து - அவர்களுக்கு காப்பாகவும், அரணாகவும் இருக்கும்

மீண்டுமொரு குறள் மனநலம், இனநலம் என்பவற்றை வைத்து. நல்ல சேர்க்கை ஒன்றே மன நலம் நிரம்பப் பெற்றவர்களான சான்றோர்க்கும் அரணாகவும், காப்பாகவும் இருக்கிறது என்று சொல்லும் குறள். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தாலும், சுற்றிச் சுற்றி சொன்னதையே சொல்லுகிறார் வள்ளுவர். இந்த அதிகாரத்துக்கு பத்துக் குறள்கள் அதிகம்தான்.

இன்றெனது குறள்:

சான்றோர்க்கும் நல்மனத்தர் ஆயினும் சேரினமே
ஆன்றநல் காப்பாகும் நின்று

sAnROrkkum nalmanaththar Ayinum sErinamE
AnRanal kAppAgum ninRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...