ஜூலை 28, 2013

குறளின் குரல் - 466


28th July 2013

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
                      (குறள் 459: சிற்றினம் சேராமை அதிகாரம்)

Transliteration:
Mananalaththin Agum – only based on the health of one’s mind
maRumai – the rebirth will be great
maRRahdhum – not only that, but that itself
Inanalaththin – will bestow the company of great people
EmAppuDaiththu – and protect like a fortress.

For one’s life to be great in the future births, in the present birth their mind should be sane, sound and healthy so that they engage in ethical deeds and are virtuous. That healthy state of mind will give them the company of great scholars of high erudition and protect them like a fortress.

This verse also links the health state of mind and the great companionship, yet again.

Already vaLLuvar has said previously that the virtuous deeds of current birth will bear fruit in future births. For people of healthy state of mind, only virtuous and ethical deeds are possible, which in turn ensures great life in the future births.

“Based on health of the mind, bestowed are the merits of a rebirth;
 It is also the safety net for great companionship for life on earth”

தமிழிலே:
மனநலத்தின் ஆகும் - ஒருவர் மன நலத்தினை ஒட்டியே அவருக்கு
மறுமை - கிடைக்கக்கூடிய மறுபிறப்பின் சிறப்பும் அமையும்
மற்றஃதும்  - அதுமட்டுமல்லாது, அதுவே
இனநலத்தின் - நல்லோர் இனச் சேர்க்கையை அளித்து
ஏமாப்புடைத்து - காக்கின்ற அரணாகவும் உள்ளது.

ஒருவருடை மறுபிறப்பு நல்லதாக அமைய, இப்பிறப்பிலே அவருடைய மனமானது வளமானதாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாது, அம்மன நலமே ஒருவருக்கு நல்லவரும் பெரியோரும் ஆனவர்களின் சேர்க்கையை அளித்துக் காக்கின்ற அரணாக உள்ளது. மற்றுமொரு குறள் மன நலத்தையும், இன நலத்தையும் இணைத்து. இம்மையின் அறம் மறுமையிலும் தொடர்ந்து வரும் என்று ஏற்கனவே வள்ளுவர் சொல்லியிருக்கிறார். மன நலத்தினால் ஒருவருக்கு அறம்தான் செய்கையாகும், அதனால் அவர்க்கு மறுமையிலும் பெரியோர்களின் இனத்தோடு சேர்க்கைக் கூடி, சிறப்பான வாழ்வே அமையும்.

இன்றெனது குறள்:

நன்மனத்தாற் கெப்பிறப்பும் நற்பிறப்பே - காத்ததுவே
இன்னினமும் வாய்க்கத் தரும்

nanmanathAR keppirappum naRpiRappE- kAththadhuvE
inninanmum vAykkath tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...