26th July 2013
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
(குறள் 457: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
Mananalam
mannuyirk kAkkam inanalam
ellAp
pugazhum tharum
Mananalam – wellness of mind
Mannuyirkk(u) – for all people on this earth
Akkam – will give wealth of all kinds
Inanalam – the companionship of great people
ellAp
pugazhum – all the glory (apart from wealth)
tharum – will bring
For people on earth, based on the wellness of their
mind, is their wealth. The wellness of mind becomes the reason for earning
wealth. But if their companionship is that of great people of virtue and
erudition then that will bring lasting fame and glory apart from wealth.
Once again it is good to remember the poem of
Auvvayaar from mUdhurai. It is good to see great people; it is good to listen to
the words that bring goodness; it is good to talk about goodness great people.
It is good to be in the company of the greats.
When such good things are together, is there any
reason for not having a lasting fame and glory for someone?
“Wealth
is for people on earth with with wellness of mind
All glory will be for, companionship of great
that you find”
தமிழிலே:
மனநலம் - நல்லவற்றையே நினைத்து நல்லனவே செய்யும் மனத்தின் நலமானது,
மன்னுயிர்க்கு - உலகத்து உயிர்களுக்கெல்லாம்
ஆக்கம் - செல்வத்தைத் தரக்கூடியது
இனநலம் - ஒருவர் சார்ந்திருக்கும்
சேர்க்கையானது பெரியோர் இனமாக இருப்பின்
எல்லாப் புகழும் - அவர்களுக்கு
செல்வத்தோடு, எல்லாவித புகழையும்
தரும் - அதுவே தரும்.
உலகில் வாழும் மனிதர்களுக்கு
அவர்களுடைய மனங்களின் நல்லத்தன்மையப் பொருத்து அவர்களிடத்தில் செல்வம் இருக்கும். இது
ஈட்டலுக்குக் காரணியாய் அமைந்தது. ஆனால் அவர்கள் சேர்ந்திருப்பது அறவழி சான்றோராம்
பெரியோர்களானால், அவர்களுக்கு செல்வத்தோடு, புகழையும் அது ஈட்டித்தரும். மீண்டும் ஒருமுறை
ஔவையாரின் மூதுரைப் பாடலை நினைவு கூறுதல் நல்லது. இதையே அறிவுடமை அதிகாரத்திலும் மேற்கோளாகக்
காட்டியுள்ளோம்.
நல்லோரைக்
காண்பதுவும் நன்றே நலம்மிக்க
நல்லார்சொல்
கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும்
நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும்
நன்று
இந்த நன்மைகள்
எல்லாம் ஒருவருக்குப் புகழை மொண்டு தரும் என்பதே இக்குறளின் கருத்து.
இன்றெனது குறள்:
செல்வம்
தருமுல கோர்க்கு மனநலம்
நல்லினமோ பொன்றாப் புகழ்
selvam tharumula gOrkku mananalam
nallinamO ponRAp pugaz
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam