25th July 2013
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
(குறள் 456: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
mananthUyArk
kechchamnan RAgum inanthUyArkku
illainan
RAgA vinai
mananthUyArkk(u) – for people of pure mind
echcham – fame
nanRAgum – will always be there (even after they leave this earth)
inanthUyArkku – those who keep the company of great people of ethics
illai
nanRAgA – there is nothing that will go wrong or bad
vinai – among the deeds they are engaged in
Parimelazhagar intepretes “echcham” as good
offspring (children). The word means what one leaves behind after life. For
ordinary people, offspring may apply, but for the rulers, what they leave
behind must be their lasting fame, things for which they are remembered for
years to come. Just like people of pure mind get lasting fame, people that seek
and keep the company of great people, the deeds they are engaged will never go
futile or fail.
The company of great people will give good guidance
and because of that the deeds will always go flawlessly. To say it with
emphasis vaLLuvar has employed double negatives, “illai nanRAgA”.
Beginning from this verse, next four verse compare “purity
of mind” and “puritans company” to answer possibly the question of “what is in
it for me?”
“Purity
of mind will bring everlasting fame; in the company
Of puritans none will not be done well, to
fester acrimony”
தமிழிலே:
மனந்தூயார்க்(கு) - தூய்மையான மனம் கொண்டவர்களுக்கு
எச்சம் - புகழ், கீர்த்தி
நன்றாகும் - என்றும்
நன்றே உண்டாகும்
இனந்தூயார்க்கு - தூய இனத்தினைச்
சார்ந்தவர்க்கு
இல்லை நன்றாகா - கெடக்கூடியவை
இல்லை
வினை - அவர்கள்
ஆற்றும் செயல்களுள்
எச்சம் என்பதை மக்கட்பேறு என்கிறார் பரிமேலழகர். எச்சம்
என்பது வாழ்வுக்குப் பிறகு விட்டுச் செல்வது. சாதாராண மனிதர்களுக்கு மக்கட்பேறு என்பது
பொருந்தலாம். ஆனால் ஆளுவோருக்கோ, அவர்கள் விட்டுச் செல்லும் எச்சம் அவர்களுடைய புகழ்
அல்லது கீர்த்தியாம். தூயமனத்தர் கீர்த்தியடைவது உறுதிபோல, தூய்மையான இனத்தவர்களுக்கு,
அவர்கள் செய்யும் வினைகள் எல்லாமே நன்றாகவே நடக்கும்.
சேர்க்கை பெரியோரது அணுக்கமெனில், நல்ல வழிகாட்டிகள் கிடைப்பர்;
அதனால் செய்யும் செய்கைகள் எல்லாம் சிறப்பாகவே நடக்கும். இதை உறுதியாகச் சொல்வதற்காக
“இல்லை நன்றாகா” என்று இரண்டு எதிர்மறைகளைச் சொல்லுகிறார் வள்ளுவர்.
இக்குறளோடு சேர்ந்து பின்வரும் மூன்று
குறள்களுக் கூட, மனநலம், இனநலம் இவற்றை ஒப்பு நோக்கிச் சொல்லப்பட்டுள்ளன. “எல்லாம்
சரி, இதனால் எனக்கென்ன பயன்”? என்ற கேள்விக்கு விடைகூறும் விதமாக.
இன்றெனது குறள்:
தூயமனம் கீர்த்தி தரும்நன்றாம் செய்வினைகள்
தூயவினம் சார்ந்தவர்கென் றும்
thUyamanam kIrththi tharumnanRAm seyvinaigaL
thUyavinam sArndhavarkken Rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam