24th July 2013
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
(குறள் 455: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
manaththUymai
seyvinai thUymai iraNDum
inanthUymai
thUvA varum
manath
thUymai – The purity of mind
seyvinai
thUymai – and the purity of deeds
iraNDum – those two
inan
thUymai – depending on a person’s purity of companionship
thUvA
varum – will come as the support line.
A simple verse that does not invoke a debate of
differences of opinions! Purity of a person’s mind and deeds are dependent on
the kind of companionship sought and kept.
People that are in the company of mean-minded, though may not be that
way to start with, will eventually turn out to be so. Likewise, people that
seek the company and guidance of great, will reflect the same in their mind and
deeds.
“”
Purity of mind and deeds depend
On the company that we append”
தமிழிலே:
மனந் தூய்மை - அகத்தின் தூய்மையும்
செய்வினை தூய்மை - செயல்களின் தூய்மையும்
இரண்டும் - ஆகிய இரண்டுமே
இனந் தூய்மை - ஒருவர்
சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மையைப் பொருத்து (சிற்றினம் அல்லது பெரியோர்)
தூவா வரும் - அவருக்குப்
பற்றுக்கோடாய் வரும்
இக்குறள் சொல்லும் கருத்து எளிமையானது,
கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லாதது. ஒருவருடைய மனம் மற்றும் செயல் தூய்மைகள், அவரின்
சேர்க்கையையின் துய்மையைப் பொருத்தே அமையும். சிற்றினம் சேர்ந்தார்க்கு மனமும், அதனால்
கூடிய செயல்களும் தூய்மையாய் இராது. அதே போல் பெரியோரைப் பற்றுக்கோடாகச் (தூவா) சேர்ந்தார்க்கு,
அவரால் நல்வழிப்படுத்தலும், அதனால் மனத்தூய்மையும் உண்டாம். அதன் வழி அவர்கள் செயல்களும்
குற்றமின்றி அமையும்.
கம்பராமாயண சடாயு படலத்தில், “ தீயவர்
சேர்தல் செய்தார் தூயவர் அல்லர் சொல்லில் தொன்னெறி தொடர்ந்தோர் என்றான்” என்பார் கம்பர்.
இன்றெனது குறள்:
தூய்மை மனமும் செயலும் உறுமினத்
தூய்மைபற்றுக் கோடாகி டின்
thUymai manamum seyalum
uRuminath
thUymaipaRRuk kODagi
Din
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam