ஜூலை 23, 2013

குறளின் குரல் - 461


23rd July 2013

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
                      (குறள் 454: சிற்றினம் சேராமை அதிகாரம்)

Transliteration:
Manaththu LadhupOlak kATTi oruvaRku
inaththuLa dhAgum aRivu

ManaththuLadhupOlak kATTi – It may appear as if it reflects how one’s mind is
oruvaRku – for a person
inaththuLadhAgum – But, it is truly reflective of which company is kept (what)
aRivu – intellect and wisdom.

Once again, a verse relating mind and class / clan. It may seem that intellect or wisdom is based on one’s strength in mind or maturity. But, it depends on which gang or fraternity one belongs to. This is what is expressed by this verse.

When reading the commentary on this verse, almost everyone has done it superficially. Part of the problem is that nobody has attempted to correlate verses with what has been said previously or critically analyze with veracity in the context of other verses in the same chapter, or other chapters and other works. There seems to be a bling acceptance of what is said and interpret as the verse goes. Since it belongs to this chapter, this verse seems to advocate that everything is because of the company one keeps.

People with firm resolve at heart, and deep wisdom will not associate themselves with bad company. The otherside of the same coin is that, those who prefer such company donot possess the resolve or wisdom. Looks like there has been an active big debate on mind or clan – which dominates a person!  Is it because of the lack of clarity in vaLLuvar’s verse or the commentators did not have clarity? The truth seems to be somewhat mixed and could be both to certain extent.

In the last verse, vaLLuvar said, feelings are based on mind (highly questionable knowing the meaning of mind and its context). Here he says, though it may appear it is of mind, intellect or lack of it, is based on the clan one belongs to or the company that is kept. In general, heart, brain and mind are inter-related and talked about in different contexts. Heart is related to feelings; brain to thinking; mind is a prudent mix of both; While the first two are physical, mind is purely metaphysical representation, connecting both intellect and feeling. If such a mind will keep someone in mean company, for such a person, because of their abundant attachment to bad company, only meanness will prevail. If the mind can drive someone to be in the company of great people, it wont take into account only the feelings of the heart, but would decern what is best.

We saw a few verses from NAlaDiyAr and SirupanchamUlam while analyzing the previous verse. The NAlaDiyar verse “kaDal sArndhum” said categorically, it is not based on one’s company, but on mind, a persons attitudes and behavior are.  SirupanchamUlam also said, intellect and wisdom are based on mind. Another NAlaDiyAr, verse that we did no see says, (vEmbin ilaiyuT), even if the banana becomes a fruit within neem leaves (bitter in nature), it will not change its property of being sweet. Such is the nature of people of natural intellect. Regardless of their company it is rare that they will turn bad.

The above thought is acceptable because it gives a little bit of allowance and a possibility of being otherwise also. It also shows people that belonged to vaLLuvar times or even a little later had the intellectual power, authority or integrity to think differently and say what they thought without being influenced. They did not have the herd mentality and blindly followed one another.

May be we can interpret the verse like this. The clan one belongs to shapes the persons intellect, not their mind; hence one must seek the company of greats and not mean minded.

“Intellect is not that formed by the mind;
 It is by the company they go out to find”

தமிழிலே:
மனத்துளது போலக் காட்டி - மனத்தின் வளர்ச்சியே என்பதுபோல் தோன்றினாலும்
ஒருவற்கு - யாருக்கும்
இனத்துளதாகும் - அவர் சார்ந்திருக்கும் இனம் எதுவோ - சிறியோர், பெரியோர் தொடர்பு - பொருத்தே
அறிவு - அவருடைய அறிவானது மதிக்கப்படும்,

மறுபடியும் மனத்தையும் இனத்தையும் தொடர்புறுத்தி ஒரு குறள். ஒருவர்க்கு, அவருடைய அறிவு அவருடைய மனத்திண்மை, முதிர்ச்சியினைப் பொருத்தே என்பதுபோல் தோன்றும். ஆனால் உண்மையில் அவர் எவ்வினத்தைச் சார்ந்திருக்கிறாரோ, அதைச் சார்ந்தே அவருடைய அறிவானது மதிக்கப்படும். இதுவே குறள் சொல்கிற கருத்து. சிறிது விரிவாக ஆராய்து பார்ப்போம் அறிவின் துணை கொண்டு.

பொதுவாக எல்லோரும் இந்த குறளுக்கான உரையை மேம்போக்காவே, பொருள் செய்துள்ளதாகத் தோன்றுகிறது. இந்த அதிகாரத்தைச் சேர்ந்த குறள் என்பதற்காக, இனத்தினாலேயே எல்லாம் என்று வலியுறுத்துகிற குறளிது என்று தோன்றுகிறது.

உறுதியான உள்ளமும், ஆழ்ந்த அறிவும் உள்ளவர்கள் தம்மை சிற்றினத்தோடு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இதனுடைய மறுபக்கம், சிற்றினத்தை விரும்பி இருப்பவர்களுக்கு மனத்திண்மையும், நல்லதை அறிவதும் இராது.  மனமா, இனமா என்று ஒரு பட்டிமன்றே நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. வள்ளுவரின் குறளில் தெளிவில்லையா? செய்திருக்கிற உரையாசிரியர்களுக்குத் தெளிவில்லையா? ஓரளவுக்கு இரண்டுமே கூட என்று சொல்லலாம்.

கடந்த குறளில் மனத்தானாம் உணர்ச்சி என்றார், இங்கே மனத்துளதுபோல் தோன்றினாலும், இனத்துளதாகும் அறிவு என்கிறார். பொதுவாக இதயம், மூளை, மனம் என்ற மூன்றுமே பேசப்படுகிறவை. இதயம் உணர்வு பூர்வமானது; மூளை சிந்திக்கக்கூடியது. மனம் என்பது சிந்தை அல்லது சிந்திக்ககூடிய ஒரு அருவக்கருவியாக உருவகம் செய்யப்பட்டது. அறிவு, உணர்வு என்ற இரண்டையும் தொடர்புறுத்தியது. அப்படிப்பட்ட மனம் ஒருவரை சிற்றினத்தில் இருத்துமானால், அவர்களுக்கு உணர்வுமிகுதியால் ஏற்பட்ட உறவின் தொடர்பும், அதனால் வரக்கூடிய சிறுமையும்தான் இருக்கும். பெரியோரோடு இருத்துமானால்,  உணர்வைமட்டும் கொள்ளாது, உவந்தது எது என்பதைத் தெளிந்து சொல்லும் அறிவு மிக்கோராய் இருப்பதையும், அதனால் பெரியோரினத்தோடு இருத்தலையும் குறிக்கும்.

கடந்த குறளில் பார்த்த நாலடியார், சிறுபஞ்சமூலப் பாடல்கள் சொன்னவை என்ன?  கடல்சார்ந்தும் என்ற பாடல், இனத்தரனையர் அல்லர் மக்கள், மனத்தனையர் என்றது ஒரு நாலடிப் பாடல்.  அறிவென்பது மனத்தளவே என்று உறுதியாகக் கூறுகிறது சிறுபஞ்சமூலப் பாடல். முன்பு பார்க்காத ஒரு நாலடியார் பாடல் ஒன்று:

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந் தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும், என்பதே இப்பாடலின் கருத்து.

இக்கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியது. அரிது என்று சொல்லி, இது இப்படித்தான் என்று உறுதியாகக் கூறாது, மாற்றுக்கருத்துக்கும் சிறிது விழுக்காட்டினை உள்ளுரையாக விட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. வள்ளுவர் காலத்தைச் சேர்ந்தவர்களும், பின்புவந்த புலவோர்களும், வேற்றுக் கருத்துக்களைக் கொண்டு, அவற்றைக் கூறவும் செய்தார்கள் என்பதைக் காட்டுவது. பின்னால் வந்தவர்கள் போல் குருட்டாம்போக்கிலே வள்ளுவர் வாக்கை கேள்வி கேட்காமல், ஒத்துக்கொள்ளவில்லை.

வள்ளுவர் குறளினை இவ்வாறு பொருள் செய்யலாம்.  சார்ந்திருக்கும் இனமே ஒருவரின் அறிவை உருவாக்குகிறது. அவரவர் மனம் அல்ல. அதனால் நல்லினம் சேரவேண்டும் என்று சொல்வதாகக் கொண்டால், பொருந்தி வருகிறது.

இன்றெனது குறள்:

அறிவு மனத்தது அல்லவொரு வர்க்கு
அறிவது கூடுமினத் தால்

aRivu manathadhu allavoru varkku
aRivadhu kUDuminath thAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...