ஜூலை 22, 2013

குறளின் குரல் - 460


22nd July 2013

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
                      (குறள் 453: சிற்றினம் சேராமை அதிகாரம்)

Transliteration:
manaththAnAm mAndhark kuNarichchi inaththAnAm
innAn enappaDunj chol

manaththAnAm – based on their mind
mAndharkku – for people
uNarichchi – they know about themselves (the knowledge of self  - may be truly good or bad)
inaththAnAm – (but) based on the companionship they have sought out
innAn – they are known to be great or mean
enappaDunj – that others talk
chol – with words.

Everyone has in his/her mind a realistic and truthful assessment about self to know if he or she is ethical or not. But when others assess someone, it is always based on the company they are in or keep. If someone’s is in the company of mean minded, regardless of how the person may be inside, the person would be construed as mean too. Similarly, though not good in the heart, a person in the company of great people would be viewed as good and ethical too. In fact in either case, the environment would change the person to be one with it or will eject the person out of it.

There are ample examples in NAlaDiyAr, SirupanchamUlam, poems that explain the same thought.  NAlaDiyAr says, when the forest is in fire, even the sweet smelling sandalwood and the “vEngai” tree would burn to ashes. Similarly, though blemishless, because of bad company one would ruin and be spoken about badly.

It is strange, but a contrary thought is also expressed in NAlaDiyAr, where a verse says it differently. The thought expressed goes like this: Even the water close to sea/ocean (which is salty) could be sweet and the water from a hill (usually sweet and unadulterated) could be salty. So, the people are not to be assessed based on the company they are in, but based on how their mind is. People of blemishless intellect would never change. Though a contray thought, it is understandable why it is so. After all, NAlaDiyAr was compiled by a bunch of Jain monks and there could have been differences of opinions among them, the way each monk viewed certain things. Regardless, the poetic beauty makes us think, there is truth in both saying. Neither is absolute truth nor utterly false.

Another work, “SirupanchamUlam” says, the lieange of qualified and respectable will not ruin and perish, but for others it would. Bad company would bring blame and good company would fame. Intellect depends on the state of mind.

“Mind has certain wisdom and assessment about self, for all
But only ones companions show his class and, wherewithal”

தமிழிலே:
மனத்தானாம் - தத்தம் மனத்தை வைத்தே
மாந்தர்க்கு - மக்களுக்கு
உணர்ச்சி - தங்களைப் பற்றிய மதிப்பு இருக்கும் (அவர்கள் இயல்பைப் பற்றிய அறிவு)
இனத்தானாம் - (ஆனாலும்), ஒருவர் அவர் சார்ந்திருக்கும் இனத்தையொட்டியே
இன்னான் - இவன் இழியுடையான் அன்றி பெருமையுடையான்
எனப்படுஞ் - என்று பிறர் பேசக்கூடிய
சொல் - சொல் வரும்,

ஒவ்வொருவருக்கும் அவர்கள் மனத்தளவிலே தம்மைப்பற்றிய உண்மை உணர்வு இருக்கும். தாம் நல்லவரா அல்லது தீயவரா என்ற சுயமதிப்பீடும் அறிவும் இருக்கும். ஆனாலும் ஒருவரை பிறர் மதிப்பிடுவது, அவர்கள் சார்ந்திருக்கும்  சேர்க்கையினையொட்டியே. சிற்றினச் சேர்க்கையினரை, அவர் மனத்தளவிலே நல்லோராயிருப்பினும் சிற்றினத்தவராகவே உலகு எண்ணும். அதேபோல, நல்லோர் சேர்க்கையிலிருக்கும் ஒருவர் மனத்துக்கண் மாசிருப்பினும் நல்லோராகக் கருதப்படக்கூடும், நல்லோர் சேர்க்கையில் நல்லோராகவே ஆகிவிடுவராதலால்.

நாலடியார் பாடலொன்று இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.

மனத்தால் மறுவிலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.

காடு தீப்பற்றி எரியும்போது, மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும். அதேபோல, மனதில் ஒரு குற்றம் இல்லாத நல்லவராயினும், அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக, இகழப்படுவார்.

மற்றொரு  நாலடியார் பாடல் இக்கருத்துக்கு மாறாக ஒன்றைச் சொல்லுகிறது. அப்பாடல்:

கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல் தண் சேர்ப்ப !
மனத்தனையர் மக்கள் என்பார்.

இப்பாடலின் பொருள் எளிதில் விளங்கக்கூடியதே. கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும்.ஆதலால் மக்கள் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர். தத்தம் மன இயல்பை ஒத்தவராவர். மாசற்ற தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார். இப்பாடல் சொல்லுவது, இனத்தைச் சாராதது குணம் என்பதாகும். இது என்ன கருத்து முரணாக இருக்கிறதே என்று தோன்றினாலும், இது புரிந்து கொள்ளக்கூடிய முரண்பாடுதான். நாலடியார் ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பல சமணத் துறவிகளால் எழுதப்பட்டது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களால் இவை எழுதப்பட்டிருக்கலாம். கருத்து முரணானதாக இருந்தாலும், கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது.

சிறுபஞ்ச மூலத்திலும் இக்கருத்து அழகாகச் சொல்லப்படுகிறது,

தக்கார் வழி கெடாதாகும் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார் - தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி

இதன் பொருள்: தகுதியுடையவர் வழி மரபு கெடாது, ஆனால் நல்லவர்களல்லாதவர் மரபு கெடும். தீய சேர்க்கையால் பழியும், நல்லவர் சேர்க்கையினால் புகழும் உண்டாகும். அறிவானது ஒருவனது மனத்தளவே உண்டாகும்

இன்றெனது குறள்:

தன்னைத்தன் நெஞ்சறியும் ஆயினின்னார் என்பதைத்
தன்னினமே சொல்லி விடும்

thannaththan nenjaRiyum AyinnAr enbadhaith
thanninamE solli viDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...