21st July 2013
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
(குறள் 452: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
nilaththiyalbAl
nIrthirin dhaRRAgum mAndharkku
inaththiyalba
dhAgum aRivu
nilaththiyalbAl – Depending on the the properties/attributes of soil it belongs to
nIr
thirindhaRRAgum – water assumes its taste, color and utility
mAndharkku – (Similarly) for human beings
inaththiyalbadhAgum – depending on the intellect of associations of a person
aRivu – his wisdom or lack of it would be.
Since this chapter is about
avoiding mean companions, the word “inam” could either imply a “mean companionship” or “ a companionship
proud to have”. Depending on which soil the water is obtained from, the
attributes such as its color, smell and utility are seen. Such is the nature of
people too. Depending on whose company they keep, their attributes and
attitudes are reflected by their leanings.
Wisdom is in finding the companions
that are ethical and do not belong to “mean class”. In Kamba RamayaNa,
KumbhakarNa scolds RAvaNa about his deed of coveting RamA’s wife and bringing
war to his door step because of that. In that verse given in Tamil below,
KumbhakarNa says, “though we have come from the lineage of scholarly, revered sage Pulasthya, the glory
of our clan has become ruined because of your act. Won’t our rule come to an
end because of that? Your deed has become the reason for the ruin of our rule.
Is n’t that the pure water, the property of the soil it is from?”. Though the question
seems somewhat irrelevant here and there is no direct connection between the
quote and the character of RavaNA, it could be construed as an implied question
posed by KubhakarNa, as to how could a blood lineage from sage Pulasthya stoop
down so low!.
Auvayyyar says, “kulaththaLavE
AgumAm guNam”. Some twist it from the caste political view. But the fact is
that people that are from good and ethical background, mostly shape up well and
of course there are exceptions too, like RavANa was. Like wise, people from
absolutely mean background could turn out to be extremely good too. After all
the story of Prahlaadha and even that of VibheeshanA point to that fact. In
fact the story of RavaNA says, despite his high caste birth, he went so low in
character to slip in ethical conduct, trip, fell low, and perish.
“As
the soil is, so the water is, in its attributes and utility;
and atrributes of a man’s companions decide
his quality”
தமிழிலே:
நிலத்தியல்பால் - தான் எந்த
நிலத்தோடு சேர்ந்திருக்கிறதோ அந்நிலத்தின் தன்மையைக்கொண்டு
நீர்திரிந்தற்றாகும் - நீரானது நிறம், சுவை, பயன் எல்லாம்
கொள்ளும்
மாந்தர்க்கு - (அதுபோல),
மனிதர்களுக்கு
இனத்தியல்பதாகும் - சார்ந்திருக்கும் இனத்தின் அறிவாண்மையைப்
பொருத்தே
அறிவு - அவர்களுடைய
அறிவும் இருக்கும்.
இவ்வதிகாரமே சிற்றினம் சேராமை என்பதால்,
இதில் கூறப்பட்டுள்ள இனம் சொல், சிற்றினம் அல்லது சிற்றினமில்லாதது (பெருமைக் கொள்ளத்தக்க
செயல்களைக் கொண்ட இனம்) என்று இரண்டையும் குறிக்கும். எந்த நிலத்திலிருந்து நாம் நீரைக்
கொள்கிறோமோ, அந்நிலத்தின் தன்மையைப் பொருத்தே நீரானது உண்ணீரா அன்றி பயனற்ற நீரா என்பது
தெரியும். நீர், நிறம், சுவை, மற்றும் பயன் என்ற அடையாளங்களுடன் காணப்படும்.
மக்களும், அவர்கள் சார்ந்திருப்பது
நல்ல இனமா, அறிவு அற வழிகளில் ஊன்றியதா அல்லது பயனற்றோரின் கூட்டமா என்று தெரிந்து
ஒழுகுவதே அறிவுடமையாகும்.
கம்பராமாயணத்தில் கும்பகருண வதைப்படலத்தில்
கும்பகருணன், இராவணனுக்குக் கூறும் அறிவுரையாகக் கீழ்கண்டபாடல் இக்குறளின் கருத்தை
ஒட்டியே சொல்லப்படுகிறது.
புலத்தியன் வழிமுதல் வந்த
பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது;
கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது;
மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும்
நீரதால்.
புலத்திய
முனிவரின் வழிதோன்றல்களான வஞ்சனையற்ற நமது குலத்தின் தன்மை உன்னாலே ஒழிந்தது. நமது
ஆட்சியே முடிவுறாதா? உனது செயல்களே நமது வெற்றிகள் வீழ்ச்சியடைய காரணமாகி விடும். குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின் இயல்பும் அன்றோ?
என்று இராவணனைக் கேட்கிறான் கும்பகருணன். ஔவையாரின்
(எந்த ஔவையாரோ?) வாக்கான “குலத்தளவே ஆகுமாம்
குணம்” என்பது பிறந்த குலத்துக்கு ஏற்றவாரே ஒருவரது குணம் அமையும் என்று வருவதால்,
பலரும் எதிர்ப்பு கூறுவர். இதை வருணம் என்ற பொருளில் பொதுவாகக் கூறுவது தவறுதான். ஆனால்
நற்குடிப்பிறப்பே ஒருவருவக்கு நல்லவற்றைக் கற்பித்துவிடும் என்பதில் ஐயம் இருக்கமுடியுமா?
குப்பையில் மாணிக்கமும் உண்டு, அதைப்போல நற்குடிப்பிறப்பினருக்கு, ஊழ் வினையாலும் சேர்க்கையாலும்
சில சமயங்களில் நற்குடிப்பிறந்தோரும் பிறழ்வது உண்டு. இராவணன் பிறப்பிலே உயர்ந்தவனாயிருந்தாலும்,
பெண்ணாசையிலே அறநெறி பிறழ்ந்தான், தாழ்ந்தான், மடிந்தான்.
இன்றெனது குறள்:
மண்வளத்தால் நீரமையும் மக்களுக்கு சேரினத்தால்
ஒண்ணுவதே கொள்ள றிவு
maNvaLaththAl nIramaiyum makkaLukku sErinaththAl
oNNuvadhE koLLa rivu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam