ஜூலை 12, 2013

குறளின் குரல் - 450


12th July 2013

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
                      (குறள் 443: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)

Transliteration:
ariyavaRRu LellAm aridhE periyAraip
pENith thamarAk koLAl

ariyavaRRuL –that which is considered rare
ellAm – among all of them
aridhE – this is rare (which  one?)
periyAraip – support of elderly soaked in virtuousity and knowledge
pENith – Doing whatever that can be done to them
thamarAk – keeping them close to self
koLAl – must be done.

Among all rare things worthy of getting the rarest blessing is the company of virtuous, knowledgeable elders.  One must seek and keep their company even by doing whatever is pleasing to them. Among the commentaries, kALingar says that these are rarer to previously defined virtues of education, good listening, being knowledgeable, avoiding faults etc.

A verse from Pazhamozhi nAnUru takes an example from RamAyaNam. The King of Lanka was RavaNa, and his younger brother was VibheeshaNA. He came to Rama, seeking his closeness and trusting that he was the only refuge for him. That trust eventually made him the king of Lanka. So there is none who has not benefited being close to elders of virtue and knowledge.

The rarity among rare blessings is the closeness
Of elderly scholars; must be sought with keenness

தமிழிலே:
அரியவற்று(ள்) - மிகவும் அருமையானதாகக் கருதப்படும்
எல்லாம் - எல்லாவற்றுள்ளும்
அரிதே - மிகவும் அருமையானதாகும்
பெரியாரைப் - அறிவிலும் அறத்திலும் சிறந்த பெரியோரின் துணையைப்
பேணித் -அவருக்கு தேவையானவற்றை செய்தாவது
தமராக் - தமக்கு அணுக்கமானவராகக்
கொளல் - கொள்ள வேண்டும்.

பெறக்கூடிய பேறுகளுள் மிகவும் அரியதும், அருமையானதுமான பேறென்பது, அறிவிலும், அறத்திலும் சிறந்த பெரியோர்களை, அவர்களுக்கு உவந்தவற்றைச் செய்தாவது தமக்கு அணுக்கமானவர்களாக இருத்திக்கொள்ளுதலாம். உரை வேறுபாடுகளுள், காளிங்கர், முன்பு சொன்ன கல்வி, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல் போன்ற அரிய குணங்களிலும் அரிதானது பெரியோரின் துணை கோடல் என்பதாம்.

‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்”

மேற்கண்ட பழமொழிப்பாடல் கூறுங்கருத்து இதுதான். இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான். பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை என்று குறளின் கருத்தை ஒட்டிய பாடல் இது.

இன்றெனது குறள்:

அறவாழி ஆன்றோர் அணுக்கம் அரிது
சிறப்பவ் வரிதைக் கொளல்

aRavAzhi AnROr aNukkam aRidhu
siRapav varidhaik koLal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...