ஜூலை 14, 2013

குறளின் குரல் - 451


 13th July 2013

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
                      (குறள் 444: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)

Transliteration:
thammiR periyAr thamarA ozhugudhal
vanmaiyu LellAm thalai

thammiR periyAr – Elderly that are superior in virtues, and knowledge
thamarA – considering them as our own
ozhugudhal – be close to them
vanmaiyuLellAm – among all great powers
thalai – is the foremost.

Even if the ruler has many other strengths and greatness, what is of foremost importance is to keep the elderly that are greater in knowledge and virtues than self. There is no real difference between this verse and the previous verse. Both talk about keeping the company of great people close to self for rulers. The first one talked about it being exclusively rare. The second one is about this being greater strength and trait.

“To keep them close as own, the elderly of virtues and erudition
 The greatest strengths among all, and must be ruler’s aspiration”

தம்மிற் பெரியார் - தம்மைவிட அறிவிலும் அறவழிகளிலும் சிறந்த பெரியோரை
தமரா - தம்முடையவர் போல் எண்ணி
ஒழுகுதல் - அவரோடு அணுகி இருத்தல்
வன்மையுளெல்லாந் - வல்லமைகளுக்கெல்லாம்
தலை - முதலாயது ஒருவர்க்கு

மற்ற எல்லாவித வல்லமைகளும் கொண்டிருந்தாலும் ஆளுவோருக்கு, தம்மைவிட அறிவிலும், அறத்திலும் மிக்காரைத் தமக்கு மிகவும் அணுக்கமானவராகக் கொண்டு வாழுதலே         தலையாய வல்லமையாகும். சென்ற குறளுக்கும், இக்குறளுக்கும் பெரிய வேற்றுமை ஒன்றுமில்லை. பெரியவரைத் துணைக்கொள்ளுதலே சிறந்ததாம் என்பதையே வேறுவிதமாக சொல்கிற குறளிது.

இன்றெனது குறள்:

அறிவறத்தில் தம்மிலும் மிக்காரைச் சேர்தல்
செறிவாய வல்லமை யாம்

aRivaRaththil thammilum mikkAraich chErdhal
serivAya vallamai yAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...