11th July 2013
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
(குறள் 442: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)
Transliteration:
uRRanOi
nIkki uRAamai muRkAkkum
peRRiyArp
pENIk koLaL.
uRRa – that which came before (what?)
nOi
nIkki – removing hardship, affliction, distress
uRAamai – not to have it anymore
muRkAkkum – saving before it comes
peRRiyArp – people that help for that
pENIk
koLaL – keep their close by doing whatever is necessary
The
verse says this: One must seek and request the support of learned and
experienced elders that can remove the distress so far faced and can also
prevent the future ones. The word “elderly” is an inferred meaning in this
verse. Only those who have ability and the experience can help others remove
the distress, instead of using “the elderly”
vaLLuvar has used the word “able” (peRRiyAr).
Appar
in Thirvadhigai thEvAram, says the same in this verse, “thannai aDaindhAr vinai
thIrppadhanRO thalaiyAyavar thangkaDanAvadhuthAn” (it is the bounden duty of
elderly to protect the ones who have reached out to them). AthichchUDi says, “
periyAraith thuNai koL” In simple one liner.
Parimelazhagar
in his commentary says the distress as God given and man created. The natural
calamities of flood, famine, disease
outbreaks are attributed to God’s act to straighten out the humans generally,
which is far from truth. After all God is in the form of love as per most
religion and it is hard to think that God would do something to punish at large
scale. Distress, whether created by nature
or man can be better handled with the help of experienced elders.
“Seek and request the
help of experienced elders as a security
To ward off distress of the past and any
impending calamity”
தமிழிலே:
உற்ற - முன்பு வந்த
நோய் நீக்கி - துன்பங்களைப் போக்கி
உறாஅமை - மேலும் வரக்கூடியவற்றை வராவண்ணம்
முற்காக்கும் - முன்பே காக்கும்
பெற்றியார்ப் - தன்மையரின் துணையை
பேணிக் கொளல் - வேண்டிப் பெற்று கொள்ளவேண்டும்
குறள்
சொல்லும் கருத்து இதுதான்: இதுகாறும் வந்த துன்பங்களை நீக்கும் ஆற்றலும், இனிமேலும்
துன்பங்கள் வாராமல் காக்கும் ஆற்றலும் கொண்ட அறிவுள்ளவர்களின் துணையை ஒருவர் வேண்டிப்
பெற்றுக்கொள்ள வேண்டும். இதிலே பெரியோர் என்பது பெறப்படும் பொருள். ஆற்றலும் அனுபவமும்
பெற்ற பெரியோர்களுக்கே துன்பங்களைத் துடைக்கும், வராமல் காக்கும் ஆற்றல் இருக்குமாதலின்,
பெரியோர் என்னாது, பெற்றியோர் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார் வள்ளுவர்.
அப்பர்
சுவாமிகள் திருவதிகைத் தேவாரத்தில் இறைவனை இப்பொருள்வரப் பாடுகிறார். “தன்னை அடைந்தார்
வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடனாவதுதான்”. ஆத்திசூடியும், “பெரியாரைத் துணை கொள்”
என்கிறது.
பரிமேலழகர்
உரையில், துன்பங்களை தெய்வத்தான் வருவதும், மனிதர்களால் வருவதுமென இரண்டு வகைகளாகப்
பிரிக்கிறார். இயற்கைப் பேரழிவுகளாகிய வெள்ளம், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றை தெய்வத்தால்
வருவதாகக் கூறுவது சற்று ஒத்துக்கொள்ள முடியாததுதான். இறைவனோ அன்பு மயமானவன். அவனால்
பேரழிவு என்பது சிந்திக்கக்கூட இயலாத ஒன்று. ஆனால் பொதுவாக நடைபெறும் இயற்கைப் பேரழிவுகளுக்கும்
முன்பாக பெற்ற அனுபவமும் உடையவர்கள் துணையைக் கொள்ளல் நன்றே.
இன்றெனது குறள்:
வந்ததுன்பம் போக்கிமேலும் வாராமல் காப்போரை
வந்தித்து சேர்வதே சீர்
vandhathunbam
pOkkimElum vArAmal kAppOrai
vandhiththu
sErvadhE sIr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam