45: (Seeking guidance of great - பெரியோரைத்
துணைக்கோடல்)
[Righty placed
after the chapter of “Avoding faults”, this chapter discusses the ways that one
can seek and avail the guidance of great, elderly people of experience. Guidance
from such knowedlgeable, elderly can steer clear a ruler of all the faults or
help them avert them before they befall. The word “periyAr” encompasses
erudition, experience and enliving ethically by what their education and life
taught them as virtuous ways; only such people would fully be qualified as
highly placed great to guide others, especially rulers in governance.]
10th July 2013
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
(குறள் 441: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)
Transliteration:
aRanaRindhu
mUththa aRivuDaiyAr kENmai
thiRanaRindhu
thErndhu koLal
aRanaRindhu – Understanding and having the knowledge of the virtuous ways
mUththa – deeply experienced
aRivuDaiyAr – elderly scholars of high erudition and ethics
kENmai – their relationship, friendship and outlook
thiRanaRindhu – understanding the value of that
thErndhu – and also learning how to secure such friendships
koLal – must have.
One
must secure the friendships and the outlook of elderly that are well versed in
books of ethics, virtuous knowledge and experience. In the very first verse of
this chapter, vaLLuvar addresses the very purpose of the chapter.
Sambandar
thEvAram expresses the same thought, “youngsters should submit to the elders of
erudition”. Knowledgeable ministers, and friendships of elderly must support
rulers that are in the position to head! This has been amply evident in Indian
sub-continent through the rules of many rulers. The poet MosikeeranAr who slept
in the kings cot was indeed served by the king himself to facilitate his rest,
out of friendship respecting the erudition of the poet.
PuranAnURu,
in this age old poetry aptly capturing the Tamil culture, “yAdum UrE, yAvarum
kELir” says, “periyOrai viyaththalum ilamE siRiyOrai ikazdhal adhaninum ilamE”.
The age is not the criteria to respect or disrespect someone. It is the
knowledge and the outlook that earn respect.
Sambandar
thEvAram says the same thought saying, “siRiyavar
aRivinil mikkA viruththarai aDivIzhnidhiDam pugum” (youngsters
must prostrate the elders of erudition).
Why
must one seek the friendship and guidance of elderly scholars? It is because
they tolerate the mistakes of youngsters and guide them appropriately. Is it difficult to get such friendships for
who avoide faults and do good? No says, nAlaDiyAr.
“Seek
and attain the friendship, vision of erudite edlers
Understanding their efficacy and guidance that
fodders”
தமிழிலே:
அறனறிந்து - இவை அறஞ்சார்ந்த வழிகளென்ற அறிவினை கொண்டு
மூத்த - முதிர்ந்த
அறிவுடையார் - அறிவினில் சிறந்த பெரியவர்கள்
கேண்மை - நட்பினை, உறவை, கண்ணோட்டத்தை
திறனறிந்து - அதன் அருமையினை அறிந்து
தேர்ந்து - பெறும் வகையினையும் கற்று
கொளல் - கொள்ள வேண்டும்
அறியவேண்டிய அறநூல்களை கற்றுணர்ந்து, அறிவாலும், அறஞ்சார்ந்த
வழிகளானும், அனுபவத்தினாலும் முதிர்ந்த பெரியோர்களின் நட்புறவையும், கண்ணோட்டத்தையும்
அவற்றின் அருமையினையும், பெரும் வகைகளையும் கற்று தேர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும்
என்பது இக்குறளின் கருத்து. அதிகாரத்தின் பயனை முதற்குறளிலேயே சொல்கிற குறள்.
கேண்மை என்ற சொல்லுக்கு நட்பு, உறவு, என்ற வகையிலும், கண்ணோட்டம்,
பார்வை என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். அறிவில் சிறந்தவர்களது, மற்றும் உலக வழக்குகளிலே
உழன்று தோய்ந்த அனுபவமும், பெரியோர்களது, கண்ணோட்டம், பார்வைகளிலே அறிவின் முதிர்வும்,
பட்டறிவும் தெரியும். ஆள்வோருக்கு இவை தேவையான வழிகாட்டிகளுமாம்.
சம்பந்தர் தேவாரம் ஒன்று, “சிறியவர் அறிவினில் மிக்க விருத்தரை அடிவீழ்ந்திடம் புகும்”. ஆட்சிமுறையிலே,
தலைமைப் பொறுப்பிலே இருப்பவருக்கு அறிவில் சிறந்த அமைச்சர் குழாமும், பெரியோர்களின்
நட்பும் தேவை என்பதை எல்லா ஆட்சிமுறைகளுமே இந்திய துணைகண்டத்தில் உணர்த்தியிருக்கின்றன.
தம் கட்டிலில் களப்பின் காரணமாக அயர்ந்து தூங்கிவிட்ட மோசிகீரனாருக்கு, சாமரம் வீசிய
மன்னன், அவரது புலமைக்கும் அறிவுக்கும், அதன்காரணமாக ஏற்பட்ட நட்புக்கும் மதிப்பு கொடுத்ததாலன்றோ
அவ்வாறு செய்தான்?
பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே
என்ற புறநானூற்றுப் பாடல் சொல்லும் கருத்து: வயதில் முதிர்ந்ததற்காக மட்டும் ஒருவரை
வியப்பதும், சிறியவர் என்பதனால் அறிவில் சிறந்தோரை இகழ்தலும் இல்லாதது தமிழர் பண்பாடு.
இதை “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.
பெரியோரின் பெருநட்பைக் கொள்ளவேண்டியது ஏன்? அவர்கள் தாம் செய்யும்
பிழைகளைப் பொறுப்பதால்தானே? தவிரவும் நல்லன உணர்த்தி நல்வழி நடத்துவதால்தானே? குற்றங்கள்
தவிர்த்து நல்லன செய்வோர் அத்தகு நட்பு அடைதல் அரிதா? இல்லை, என்கிறது நாலடியார் பாடலொன்று.
“பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத்
தமர்”
இன்றெனது குறள்:
அறவாழி மூதறிஞர் நட்பின் அருமைச்
சிறப்பாழம் ஆய்ந்துகொள் வீர்
aRvAzhi mUdhaRinjar natpin arumaich
chiRappAzham AyndhukoL
vIr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam