மே 28, 2013

குறளின் குரல் - 406


28th May 2013
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.                                                 
                        (குறள் 398: கல்வி அதிகாரம்)
Transliteration:
orumaikkaN thAnkaRRa kalvi oruvarkku
ezumaiyum EmAp puDaiththu

orumaikkaN – In one birth
thAnkaRRa – gained (studied) by a person
kalvi - knowledge
oruvarkku – for that person
ezumaiyum – in all seven births
EmAppu – as a protection
uDaiththu – will be

In this verse vaLLuvar says the use of education very attractively, probably for people that are not motivated to be educated. Buy one, get one free is not just a modern day selling technique. vaLLuvar employs that for a noble cause of educating people.  For anyone, the knowledge gained, will be beneficial not only in the present birth, but in all subsequent births too

Learnings of one birth will stand to protect
 A person, in all other births to follow intact”

தமிழிலே:
ஒருமைக்கண் - ஒரு பிறப்பில்
தான்கற்ற - தான் கற்றுத்தேர்ந்த
கல்வி - கல்வியானது
ஒருவற்கு
 - ஒருவருக்கு
எழுமையும் - ஏழ் பிறப்பிலும்
ஏமாப்பு - அரணாக, பாதுக்காப்பாக இருக்கும் தன்மையை
உடைத்து - உடையது.

இங்கு வள்ளுவர் கல்வியின் பயனை மிகவும் கவரும் வகையிலே கூறுகிறார். ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது இன்று வந்த வியாபார உத்தியல்ல. ஒருவருக்கு அவர் ஒருபிறப்பில் கற்ற கல்வி அப்பிறப்பில் மட்டுமல்லாது அவருடைய எழுபிறப்பில், அதாவது பின்வரும் பிறவிகளிலும் தொடர்ந்து பயன் தந்து அரணாகக் காக்கும் என்கிறார் வள்ளுவர்.

இன்றெனது குறள்(கள்):
முப்பிறப்பின் கல்வியது மூவாதே இப்பிறப்பும்
எப்பிறப்பும் வந்துத வும்
muppiRappin kalviyadhu mUvAdhE ippiRappum
eppiRappum vandhudha vum

இம்மையில் பெற்றகல்வி ஏழ்பிறப்பும் வந்துதவும்
செம்மை அரணொரு வர்க்கு
immaiyil peRRakalvi EzhpiRappum vandhudhavum
semmai araNoru varkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...