மே 27, 2013

குறளின் குரல் - 405


27th May 2013

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.                                                              
                        (குறள் 397: கல்வி அதிகாரம்)

Transliteration:
yAdhAnum nADAmal UrAmAl ennoruvan
sAndhuNayung kallAdha vARu

yAdhAnum – whichever places are there are, they are
nADAmal – one’s own country (for learned)
UrAmAl – own city (for learned)
Ennoruvan – despite this why a person
sAndhuNayung – till dying day
kallAdhavARu – would not be leaning to learning?

For scholars wherever they go, gain and glory follow – this is an old adage. Based on this a pazhamozhi400 poem says, if we have to compare a king and a learned scholar, for a king, apart from in his own his nation there is no glory anywhere else. But for a learned scholar wherever they go, they are recognized and are celebrated.

vaLLuvar thus asks, why would, knowing that for learned, every city and country is theirs, some people would not learn until their dying day? Through this verse, vaLLuvar underlines the glory of learned as well as ignorance of the uneducated.

“For learned every city or country is their own
 Knowing this why would some disown to learn?”

தமிழிலே:
யாதானும் - எவ்விடமாயினும்
நாடாமால்  - (கற்றோர்க்கு) அவரது நாடு போன்றதாம்
ஊராமால்  - (கற்றோர்க்கு) அவரது ஊரைப் போன்றதாம்
என்னொருவன்
 - அப்படி இருக்கையில் ஒருவர்
சாந்துணையுங் - தன் வாழ்விறுதி நாள் வரையில்
கல்லாதவாறு - கற்காமல் இருப்பது ஏன்?

கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி. இப்பழமொழியை வைத்து, எழுதப்பட்ட பழமொழிநானூறுப் பாடலொன்று இதோ.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னரிற் கற்றோன் சிறப்புடையன் –மன்னர்க்குத்
தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.

கற்றவர்களுக்கு யாதுமூரே, என்னாடும் தன்னாடாம் என்றிருக்கையில், சிலர் தங்கள் வாழ்விறுதி நாள்வரையில் கல்லாமல் காலம் கழிப்பதேன் என்று வினவுகிறார் வள்ளுவர். கற்றவர்களின் சிறப்பையும், கல்லாதவர்கள் கற்றலின் சிறப்பை உணராமல் வாழ்வை கழிப்பதையும் ஒருங்கே இக்குறளில் கூறூகிறார் வள்ளுவர்.

மற்றுமொரு பழமொழிநானூறுப் பாடலொன்றும் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.

ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.

இன்றெனது குறள்(கள்):

கல்லாமல் காலம் கழித்தலேன் கற்றோர்க்கு
எல்லாம் இடமென் றறிந்து

kallAmal kAlam kazhiththalEn kaRROrkku
ellAm iDamen RRaRindhu

கற்றோர்க்கு யாதுமூர் என்றறிந்தும் வாழ்நாளைக்
கற்கா கழிப்ப தெவன்?

kaRROrkku yAdhumUr enRaRindhum vAzhnALaik
kaRkA kazippa dhevan?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...