25th May 2013
உடையார்முன் இல்லார்போல்
ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
(குறள்
395: கல்வி அதிகாரம்)
Transliteration:
uDaiyArmun illArpOl EkkaRRum kaRRAr
kaDaiyarE kallA dhavar.
uDaiyArmun – Before the
erudite scholars
illArpOl – talking a
submissive posture, to learn more, though already learned
EkkaRRum – However much had
been learned before. Parielazhagar says, this words means, those who are lowly
because of greed
kaRRAr – only those are truly learned
kaDaiyarE – Only those who
don’t have such reverence for the learned
kallAdhavar – are uneducated
ignoramus and foolish
This
verse has a simple tone of explaining the greateness and humility of learned
when they have to learn from the more scholarly. Such humility will make them
take a posture of not knowing much and will show eagerness to know more. As the
verse of Auvayyar implies, “pichchai
puginum kaRkai nanRE”; knowledge brings humility to people is very amply
sounded here by vaLLuvar.
Most
commentators have interpreted the words, “uDaiyAr”,
“illArpOl” as rich and poor as it
sounds, to mean “as the poor stands
before rich” seeking help. Though
poor, to lose dignity is not the way of learned people. The humility cannot be
interpreted as loss of dignity here. The words simply mean, those who are more
scholarly and the posture of not knowing much, respectively. Uneducated and
foolish don’t even know such humility and hence are lowly in stature.
If
we have to go by Parimelazhagar’s interpretation of “EkkaRRum”, it would mean, “becoming
lowly because of desire”. If we combine that with the commonly interpreted
understanding of “uDaiyAr” and “illAr”, the verse means something very
different. It would mean, those learn to somehow get the wealth of rich, driven
by desire, posing as poor, are truly lowly people. Though nothing wrong with
that interpretation, the progression of verses indicate, this would be a wrong
fit and must be thought about.
“Learned learn from scholarly as if they
know nothing
Foolish with no humility behave as know
everything”
தமிழிலே:
உடையார்முன் - கல்வியில் சிறந்த அறிஞர்களுக்கு
முன்பாக
இல்லார்போல் - கல்வியில் வறியர் போல,
அறியாதவர்போல பணிவுடன்
ஏக்கற்றுங் - ஏது கற்றிருந்தாலும்,
ஏற்கனவே கல்வி கேள்விகளில் தாமே சிறந்திருந்தாலும், ஆசையால் தாழ்தல் என்பார் பரிமேலழகர்,
வழக்கிலிருந்து வழக்கொழிந்த்திருக்கலாம்,
கற்றார்
- இருப்பவரே கற்றவர் ஆவார்
கடையரே - அத்தகைய ஆர்வமும், பணிவும்
இல்லாத கீழான இழிந்தவர்களே
கல்லாதவர் - கல்லாதா அறிவிலிகள்.
இக்குறள்
மிகவும் எளிமையாக கற்றவர்களின் பணிவுடமையையும், கல்லாதவர்களின் இழி நிலைமையையும் கூறிவிடுகிறது,
“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற
வாக்கிற்கு ஏற்ப, கற்றல் தம்மைத்தாழ்த்திக்கொண்டாவது அறிந்தவர்களிடம் கற்பதாகும்.
உரையாசிரியர்கள்
பலரும் செல்வர்முன் வறியர் நிற்பது போன்று என்கிறார். வறியராயினும் மானமிழத்தலாகிய அச்செயலைக் கற்றார்
ஒரு நாளும் செய்யார். உடையார், இல்லார்போல் என்ற சொற்களுக்கு, கல்வியறிவில் மிக்கார்,
தாமே கற்றிருந்தும் கல்லாதவர்போல் என்ற பொருளில் மிக்காரின் உயர்வு, மற்று கற்றாரின்
பணிவு இவ்விரண்டையும் ஒருங்கே கூறுகிறார் வள்ளுவர். கல்லாதவர்களுக்கு கற்றவர்களின்
பெருமையைக்கூட உணரமுடியாததால் அப்பணிவும் மில்லாதவராயும், இழிந்தவராயும் இருப்பர்.
பரிமேலழகரது
சொல் விளக்கப்படி “ஏக்கற்றும்” என்பதற்கு “ஆசையால் தாழ்தல்” என்று பொருள் கொண்டு, செல்வர்,
வறியர் என்றும் உடையார், இல்லார் என்ற சொற்கலுக்குப் பொருள் கொண்டால், குறளின் பொருள்
முற்றிலும் மாறிவிடுகிறது. “செல்வர்முன், வறியவர்போல், ஆசையால் தாழ்ந்து எப்படியாவது
செல்வத்தை அடையவேண்டுமென்று கற்றவர்கள், இழிந்தவர்களும், கல்லாதவர்களுக்கு ஒப்பானவரும்
ஆவர்” என்னும் கருத்தே பெறப்படும்! கல்வியைச்
சிறப்பித்துக்கூறும் அதிகாரத்தில், கற்றலைப் பற்றி சிறப்பித்துக்கூறாமல், இவ்வாறு கூறியிருப்பாரா
என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இன்றெனது குறள்(கள்):
கற்றுணர்ந்தோர் முன்கல்லார் போல்கற்பர் கற்றவர்
கற்காதார் அப்பணிவில் லார்
kaRRuNarndhOr
munkallAr pOlkaRpar kaRRavar
kaRkAdhAr
appaNivil lAr
கற்றுணர்ந்தோர் முன்கல்லார் போல்கற்பர் கற்றவர்
கற்காதார் கீழானோ ரே
kaRRuNarndhOr
munkallAr pOlkaRpar kaRRavar
kaRkAdhAr
kIzAnO rE.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam