மே 24, 2013

குறளின் குரல் - 402


24th    May 2013

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.
                        (குறள் 394: கல்வி அதிகாரம்)

Transliteration:
Uvappath thalaikkUDi uLLap piridhal
anaiththE pulavar thozhil

Uvappath – for the happiness a learned person gets by meeting other learned persons
thalaikkUDi – they get together and
uLLap – to remember and be remembered and think when they would meet again for such erudite exchanges
piridhal –  go their own separate ways
anaiththE -  such things
pulavar – are learned people’s
thozhil – job or nature.

To seek and be in the company of other scholars and leave with such memories of beautiful exchanges is the primary vocation of scholars. Auvayyar in her mUdhurai says, “kaRRArai kaRRarE kAmuruvar”. How? Just like a swan would like to reach a good pond of beautiful lilies.

The word “kAmurdhal” is beautiful and proper use of the word “desirours” in this context. Another sangam poet viLambinAganAr in his work nAnmaNikkaDigai says similarly - “kaRRannar kaRRAraik kAdhalar kaNNODAr”. Those who seek out the erudite are also scholarly.

The happiness and friendship with other scholars to mutually share and gain is typically the nature of the scholarly people. When such congregations happen and when it is time to part, pleasant memories stay. Sometimes, it feels if this would congregation last for ever. But when communion happens, closure and going back own ways is also a part of it.

This verse exemplifies the quest of knowledge of erudite scholars

“To desire to be in the company of other learned scholars and part
 with memories of mutual rememberance is the vocation of erudite”

தமிழிலே:
உவப்பத் - கற்றாரைக் கண்டு அறிவினைப் பகிர்ந்துகொள்வதில் கொள்ளும் மகிழ்ச்சிக்காக
தலைக்கூடி - மற்ற கற்றவர்களைச் சந்திக்க விழைந்து, கூடி
உள்ளப் - அவர்கள் தம்மையும, தாம் அவர்களையும் நினைக்குமளவுக்கு அவர்களோடு அறிவுத் தொடர்பைக்கொண்டுவிட்டு
பிரிதல்
 - அவர்களைப் பிரிவது
அனைத்தே - போன்றவையே
புலவர் - கற்றறிந்தவர்கள் செய்கின்ற
தொழில் - தொழில் அல்லது அவர்களது இயல்பு

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது அவ்வையாரின் மூதுரைப்பாடல். அதுவும் நற்றாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை வந்து சேருவது போல. யாரோடு யார் சேர்வர் என்பதைச் சொல்லும் அழகான பாடல்.

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

விளம்பிநாகனாரின் நான்மணிக் கடிகைப் பாடலொன்று, கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்” என்கிறது. அதாவது கல்வி அறிவை உடையவர்களை விரும்பிச் சேர்பவர்களும் கற்றவர்களே.

கற்றவர்களோடு ஏற்படும் நட்பும், அவர்களோடு தாமறிந்தவற்றைப் பகிர்ந்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறிந்தவற்றை தெரிந்துகொள்வதில் உள்ள உவகை கற்றார்மட்டுமே அறிவது. அதேபோல அவர்களை விட்டு நீங்காமல் அவர்கள் தம்மோடு இருந்துவிடமாட்டார்களா என்னும் படியாக நினைத்துப் பிரிவதும் கற்றறிந்தவர்களுக்கு இயல்பு. இதுவே இப்பாடல் சொல்லும் கருத்து. உறவென்று வந்தால் அதில் பிரிவென்றும் உண்டே. ஆனால் அப்பிரிவு கற்றவர்களுக்குத் தெரிந்த உண்மையானாலும், அவர்களும் கூட தம்மோடு அறிவைப் பகிர்ந்து கொள்பவர்களை கூடிப்பிரிகையில் மீண்டும் எப்போது, என்கிற நினைப்பில்தான் பிரிவர்.

இக்குறள் கற்றவர்களின் அறிவு தாகத்தைச் சிறப்பாகக் கூறுகிறது.

இன்றெனது குறள்:
கற்றார்க்குக் கற்றாரைக் காமுறுதல் நீங்காமை
பற்றியுள்ளம் வேண்டல் இயல்பு

kaRRArkkuk kaRRAraik kAmuRudhal nIngAmai
paRRiyuLLAm vENDal iyalbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...