23rd May 2013
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
(குறள் 393: கல்வி அதிகாரம்)
Transliteration:
kaNNuDaiyar enbavar kaRROr
mugaththiranDu
puNNuDaiyar kallA dhavar
kaNNuDaiyar
enbavar –The purpose of having eyes is to be educated. Who has eyes?
kaRROr –
only those that are educated
mugaththiranDu-
The two (what) on the face
puNNuDaiyar
– Have sores (in the place of eyes)
kallAdhavar
– those that are uneducated,
The very purpose and
use of having eyes is to get educated. Uneducated, are as good as blind with
sores in the place of eyes. vaLLiuvar in a later chapter, expresses the same
thought differently tby saying “kaNNirkkaNigalam kaNNOTTam ahdhinREl
puNNenRuNarap paDum”. Kaliththogai has a similar thinking while mentioning
uneducated – “kallAdhu mudhirndhavan kaNNillA nenjam”. The value of education
is metaphorically compared to having vision with eyes. As without eyes, none
seen,visually, without education none
“seen” figuratively.
Who are considered to have eyes, the
“learned” are!
Eyes of uneducated are none but mere
sores in pair!
தமிழிலே:
கண்ணுடையர் என்பவர் - கண்படைத்ததன் பயன் கல்விபெறுவது;
யாவர் கண்படைத்தோர்?
கற்றோர் - கற்றவர்களே!
முகத்திரண்டு - முகத்திலே உள்ள இரண்டு
புண்ணுடையர் - புண்களை உடையவர்களாவர்
கல்லாதவர் - கல்வி அறிவு இல்லாதவர்கள்.
கண்படைத்ததன் பயன், கல்வி பெறுவதுதான். அத்தகைய கல்வியைப் பெறாதவர்கள், கண்ணிருந்தும்
குருடர்களே. அவர்கள் கண்களுக்குப்பதிலாக முகத்திலே இரண்டு புண்களை உடையவர்களாகக் கருதப்படுவர்.
வள்ளுவரே மற்றுமொரு அதிகாரத்தில், “ கண்ணிற்
கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணெண் றுணரப் படும்” என்கிறார். கலித்தொகை பாடலொன்று, “கல்லாது
முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்” என்கிறது.
இன்றெனது குறள்:
கற்றாரே கண்ணுளோர் கல்லாதார் கண்ணிருந்தும்
அற்றார், அவர்கண்கள் புண்
kaRRaRe kaNNuLOr kallAdhAr kaNNirundhum
aRRAr avarkaNgaL puN
புண்கள் என்பது சரியாக இருக்கும் என்பதினால் சற்று மாற்றி கீழ்கண்டவாறு கொள்ளலாம்.
கற்றாரே கண்ணுளோர் கல்லாதார் கண்ணிருந்தும்
அற்றாரக், கண்களோபுண் கள்
(அற்றார், அக்கண்களோ புண்கள்) என்றூ ஆகும்.
புண்கள் என்பது சரியாக இருக்கும் என்பதினால் சற்று மாற்றி கீழ்கண்டவாறு கொள்ளலாம்.
கற்றாரே கண்ணுளோர் கல்லாதார் கண்ணிருந்தும்
அற்றாரக், கண்களோபுண் கள்
(அற்றார், அக்கண்களோ புண்கள்) என்றூ ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam