மே 17, 2013

குறளின் குரல் - 395


17th May 2013
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.
                                (குறள் 387: இறைமாட்சி அதிகாரம்)

Transliteration:
insolAl IththaLikka vallARkku thansolAl
thAnkaN Danaiththiv vulagu

insolAl –  Speaking plesant words
IththaLikka – and being charitable
vallARkku – rulers that are capable of these
thansolAl – with their words
thAn – himself
kaNDanaithth(u) – as wants to see will be
ivvulagu – this world

A ruler, speaking sweet words, being charitable and generous, will see his country the way he desires to see, meaning prosperous in all respects. In the last verse vaLLuvar said which ruler would make the heavenly lords happy. In this verse, he says which ruler’s would have his vision of how this world (country) fulfilled, by his words.

It is a bounden duty of a rich to take care of kith and kin.  A ruler is also rich by owning the country and his citizens are his kith and kin and hence the saying is definitely true for a ruler too.

In kambarAmAyaNam, the chapter of MantharA's conniving plan to send Rama to forest, kamban says, “iniya sollinan, Igaiyan, eNNinan, vinaiyAn, thUyan, vizhumiyan, venRiyan…”  The very first two words are exactly as what vaLLuvar has said in this verse.

A ruler whne speaks plesantly, and gives generously
 Will see his country as he envisioned thriving gloriously”

தமிழிலே:
இன்சொலால் - இனிய மொழிகளைப் பேசி
ஈத்தளிக்க - வள்ளன்மையும் கூடி
வல்லாற்குத் - ஆள வல்லவர்களுக்கு
தன்சொலால்
 - தாங்கள் கூறும் சொற்களால்
தான் - தாம்
கண்டனைத்(து) - எவ்வாறு காண விரும்புகிறாரோ
(இ)வ்வுலகு - அவ்வாறே ஆகும் உலகு

இனிய மொழிகளையே பேசி, வள்ளன்மையோடு ஆட்சி செய்யவல்லார்களுக்கு, தாம் காண விரும்பும் வண்ணமே இவ்வுலகும் ஆகிவிடும் என்பது இக்குறளின் கருத்து. சென்ற குறளில் எத்தகைய ஆட்சியாளரை வானுலகு புகழும் என்ற வள்ளுவர், இக்குறளில் எத்தகைய ஆட்சியாளரின் சொற்களுக்கு இவ்வுலகோர் கட்டுப்படுவர் என்கிறார்.

“செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற வாக்கின்படி, ஆள்வோர்க்கு தங்கள் குடியெல்லோருமே செழுங்கிளையென்பதும் (உறவினர்கள்) அவர்களை காப்பாற்றவேண்டியது (ஈகையினால்) ஆளுமையாகிய செல்வம் படைத்தவர்களுக்கும் கடனே.

கம்பராமாயணப்பாடலொன்றில் (மந்தரை சூழ்ச்சிப் படலம்:18), கம்பன் அரசனைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்:

இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?

இப்பாடலின் முதல்வரிகளே இக்குறளின் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்

இன்று இக்குறளின் கருத்தையொட்டி சற்றே மாறுப்பட்ட இரு குறட்பாக்கள் எழுதப்பட்டன.

இன்றெனது குறள்(கள்):

இவ்வுலகே ஆணைக் கடங்கும் இனியபேசி
எவ்வுயிர்க்கும் ஈந்தாள் பவர்க்கு
ivvulagE ANaik kadangum iniyapEsi
evvuyirrku IndhAL bavarkku

பூவுலகே ஆட்படுந்தான் கண்டவாறு இன்சொலால்
பூவுயிர்க் கீந்தாள் பவர்க்கு
pUvulakE AtpadunthAn kaNDavARu insolAl
pUvuyirk kIndhAL bavarkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...