மே 18, 2013

குறளின் குரல் - 396


18th May 2013
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.
                                 (குறள் 388: இறைமாட்சி அதிகாரம்)
Transliteration:
muRaiseidhu kAppARRum mannavan makkaT
kiRaiyenRu vaikkap paDum

muRaiseidhu – set in virtues and justice
kAppARRum – when protects the citizens
mannavan – a ruler
makkaT(kku) – to his people
iRaiyenRu – equal to God
vaikkappaDum - would be placed

What this verse says is a commonplace knowledge. “Like the King, like the citizens” and “As King gains so do citizens” are approximate translations of golden sayings in Tamizh. When the ruler is just and virtuous in ruling, the citizens of such a state would keep the ruler as equivalent to the Godhead.

“A ruler of Virtues and justice would
 Be placed, by citizens as Godhead”

தமிழிலே:
முறைசெய்து - அறம் மற்றும் நீதிசான்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டு
காப்பாற்றும் - தன் குடிமக்களைக் காப்பாற்றுகின்ற
மன்னவன் - ஒரு அரசன் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாக முதல்வர்)
மக்கட்
(க்கு) - அவனால் ஆட்சி செய்யப்படுகின்ற மக்களுக்கு
இறையென்று - இறைவனை, வானுறையும் ஆதியைப் போன்றே
வைக்கப்படும் - உள்ளத்தில் வைத்து வணங்கப்படும்

எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்துதான்.  “அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி”, “கோனுயர குடிஉயரும்” என்று சொல்வது போல, ஒரு அரசனுடைய, ஆட்சிசெய்பவரது நீதியும் அறமும் தவறாமல் ஆட்சிசெய்யும் முறையே அவனது குடிகளையும் அவ்வாறு வைத்திருக்கும். ஒரு ஆட்சியாளர் அவ்வாறு ஆட்சி செய்கையில், அவனுடைய குடிமக்கள் அவரை வானத்தில் உறையும் ஆதிபகவனாகவே  உள்ளத்தில் வைத்து வணங்குவர். திரிகடுகப்பாடலொன்றும், “சாலக் குடியோம்பல் வல்லான் அரசன்” என்னும்,

இன்றெனது குறள்:

நீதிநெறி மாட்சியுடன் ஆளரசை வானுறையும்
ஆதியைப்போல் போற்றும் குடி

nIdhineri mAtchiyuDan ALarasai vAnuற்aiyum
AdhiyaippOl pORRum kuDi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...