16th May 2013
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன்
அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
(குறள் 386: இறைமாட்சி
அதிகாரம்)
Transliteration:
kATchik keLiyan kaDunjchollan
allanEl
mIkkUrum mannan nilam
kATchikk(u)- in looks
eLiyan – is simpleton
kaDunjchollan – and speaking harsh words
allanEl
– if he is devoid of that
mIkkUrum – heavens will praise
mannan – the rulers
nilam- land
Rulers must have
simple demeanor and manners, not using harsh words against anyone. Such rulers
will be celebrated even by heavenly lords – Thus says this verse. Parimelazhagar tdescribes such rulers as
follows: “ The country protected by such ruler, will know no hunger, disease,
foes and will be even better than the heavens that supposedly gives ultimate
happiness”.
A verse from
puRanAnURu glorifies the Chera ruler of Sangam times as “Even in heavens there
is no such country like the one protected by mAndharal chEral irumpoRai.
(“mAndharal chEra irumpoRai Ombiya nAdE puththELulagath thaRRenak kETTuvandhu”)
“Simpleton in looks, and devoid
of harsh words
The ruler’s land, is praised, by
heavenly lords”
தமிழிலே:
காட்சிக்(கு)
- பார்வைக்கு தலைவனுக்குரிய பகட்டுக்கள் இல்லாமல்
எளியன் - எளியனாய் இருத்தல்
கடுஞ்சொல்லன் - கொடுமையா பொருள்கொண்ட
சொற்களை உடையனாய்
அல்லனேல்
- இல்லாமல் இருந்தால்
மீக்கூறும் - வானோரும் புகழை
உயர்த்திக் கூறும்
மன்னன் - ஆள்வோனுடைய சொந்த
நிலம் - நாட்டினை
ஆள்வோர் எளிமையான தோற்றமும்
இயல்பும் உடையவராகவும், பிறரைக் கடிந்து தடித்த சொற்களைச் சொல்லாதவராயும் இருந்தால்,
வானகமும் அவ்வாள்வோரின் புகழைப் போற்றிக் கொண்டாடும். பரிமேலழகர் மீக்கூறுதல் என்பதை,”
இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும்
நன்று என்றல்” என்கிறார்.
புறநானூற்றுச் செய்தியொன்று
சங்கக்காலத்து சேரமன்னனான இரும்பொறை நாட்டினை இவ்வாறுப் போற்றுகிறது. “மாந்தரல் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேளுலுகத்
தற்றெனக் கேட்டுவந்து” (புறம் 22:34-5). ஆள்பவர்கள் காட்சிக்கு எளியராயும், இனியமொழி
உடையராகவும் இருத்தலை, கீழ்காணும் புறநானூற்று வரிகள் தெரிவிக்கின்றன.
“முறைவேண்டும் பொழுதில் பதன் எளியேன்”, (புறம்: 35:15)
“இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும” (புறம்: 40:9)
இன்றெனது குறள்:
தோற்றம்
எளியதாய் வன்சொலு மில்லரசை
போற்றிப்
புகழுமே வான்
thORRam
eLiyadhAi vansolu millarasai
pORRip
pugazhumE
vAn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam