15th May 2013
இயற்றலும்
ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு.
(குறள் 385: இறைமாட்சி அதிகாரம்)
Transliteration:
iyaRRalum ITTalung kAththalung
kAththa
vaguththalum valla dharasu
iyaRRalum – To plan for economic wealth and prosperity,
ITTalung – and earn by implementing the plan
kAththalung – and to protect the wealth and prosperity
kAththa vaguththalum – and to make use of it is schemes useful to
citizens
valla dharasu – are the duties of the capable rule.
This
verse also lists the important duties of a rule from the financial prosperity
building aspect, for a nation. To plan for the economic prosperity is an
important aspect of governance; to follow up on the plan and to earn by the
planned ways, to protect the wealth created by executing such a plan, and to
spend it in ways for sustainable growth, to make the nations and citizens
prosper are the duties of a capbale rule. As seen in the previous verse, this
also defines the ground rules for excellence of
a rule.
“Planning for economic strength, executing
the plan to earn, protectecting the earning
so carefully built, and to make use for national
prosperity are capable rulers yearning”
தமிழிலே:
இயற்றலும் - நாட்டுக்கான பொருளாதாரங்களை
ஆக்கும் வழிகளை வகுக்கவும்
ஈட்டலுங் - வகுத்த வழிகளால் பொருளாதாரங்களை
ஈட்டி சேகரிக்கவும்
காத்தலுங் - அவ்வாறு ஈட்டிய பொருளாதாரத்தை
முறையாக காப்பாற்றவும்
காத்த
வகுத்தலும் - காத்தப் பொருளை மக்களுக்காக
பயனாகும் திட்டங்களாக மாற்றவும்
வல்லதரசு - ஆற்றலுடையதே ஒரு அரசாகும்.
இக்குறளும், ஒரு ஆற்றலுடைய
அரசின் முக்கியமான கடமைகளை பட்டியலிடுகிறது. நாட்டுக்கான பொருளாதாரங்களை ஆக்கும் வழிகளை வகுக்கவும்,
வகுத்த வழிகளால் பொருளாதாரங்களை ஈட்டி சேகரிக்கவும், அவ்வாறு ஈட்டிய பொருளாதாரத்தை
முறையாக காப்பாற்றவும், காத்தப் பொருளை மக்களுக்காக பயனாகும் திட்டங்களாக மாற்றவும்,
ஆற்றலுடையதே ஒரு திறமையான அரசாகும். இது சென்ற குறளைப்போலவே இக்குறளும் ஒரு மாட்சிமைகொண்ட
அரசினை வரையறுக்கிறது.
இன்றெனது குறள்:
திட்டமிடும், சேர்த்ததனைக் காத்திடும் காத்ததனை
திட்டங்க ளாக்கும் மரசு
thiTTamiDum sErththadhanaik
kAththiDum kAththadhanai
thiTTanga LAkkum marasu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam