மே 14, 2013

குறளின் குரல் - 392


14th May 2013
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மான முடைய தரசு.
                                (குறள் 384: இறைமாட்சி அதிகாரம்)

Transliteration:
aRanizhukkA thallavai nIkki maRanizhukkA
mAna muDaiya dharasu

aRanizhukkA(thu) – never veer away from virtuous conduct
allavai nIkki – completely avoiding other than virtuous, being blemishless
maRanizhukkA – never losing valor                     
mAna muDaiyadh(u) – never losiing honor
arasu – is the way of ruling

This verse speaks of how to run a country as opposed to how to be a ruler and is along the lines of earlier verses of this chapter.

Being virtuous in conduct, devoid of virtues other virtuous, being valorous, and keeping the honor in tact are the ways of ruling.

PuranAnUru verse 55:9-10 says, honorable and being virtuous speak about the prevailing order of a rule.

“Virtuous, blemishless, courageous, let go never
 The honor, the ways a country is ruled by power”

தமிழிலே:
அறனிழுக்கா(து) - அறவழி நடத்தலிலிருந்து தவறாமல்
அல்லவை நீக்கி - அறமில் செய்கைகளை அறவே நீக்கி
மறனிழுக்கா
 - வீரமென்பது சற்றும் குறையாமல்
மானமுடைய(து) - மானத்தைப் போற்றிக் காப்பதே
அரசு - ஒரு அரசை நடத்தும் வழியாம்

இக்குறள் சொல்லும் கருத்தும் முந்தைய குறள்களின் அடியொற்றிதான். ஆனால் இதில் ஆளுபவரை விட ஒரு அரசை நடத்திச் செல்லும் பண்பு நலன்கள் யாவை என்பதை வள்ளுவர் கூறுகிறார். அறவழி நடத்தலில் இருந்து தவறாமல், அறத்திற்கு மாறானவற்றை அறவே அறுத்து, வீரமானது சற்றும் குறையாமல்,  மானமும் கெடாமல்  அதைப் போற்றிக் காப்பதே ஒரு நல்ல அரசை நடத்தும் வழியாகும்.

புறநானூற்று வரிகள் சொல்வது: “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55:9-10).

கம்பராமாயணப்பாடல் வீரம் சற்றும் குறையாத மானத்தை இவ்வாறு சொல்கிறது.

“மின்போன் மிளிர்வா ளொடு தோள் விழவும் தன்போர் தவிரா தவனைச் சலியா
என்போலி யர்போ ரெனினன் றிதுவோர் புன்போ ரென்நின் றயில்போ யினனால்”

இன்றெனது குறள்:
அறந்தவறா குற்றமில்லா வீரமறா மானந்
துறக்கா அரசே பெரிது.

aRanthavaRA kuRRamillA vIramaRA mAnandh
thuRakkA arasE peridhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...