13th May 2013
தூங்காமை கல்வி துணிவுடைமை
அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
(குறள்
383: இறைமாட்சி அதிகாரம்)
Transliteration:
thUngAmai
kalvi thuNivuDaimai ammUnRum
nIngA
nilanAL bavaRku
thUngAmai – Always alert
kalvi - erudition
thuNivuDaimai – being brave
ammUnRum – these three attributes
nIngA – will not leave
nilanALbavaRku – those who rule the land.
Being alert in doing deeds, erudite in governing and
conducting the national affairs and bold
in taking decision are the attributes that should not leave a rulers. It may
also be noticed that in the first three verses of this chapter, numbers go in
diminishing order of six to four to three.. Verse itself is just a continuation
of the last two verses.
Alertness, erudition and bravery, three in count
In a ruler, these attributes must alway be present
தமிழிலே:
தூங்காமை - எப்பொழுதும்
விழிப்புடன் இருத்தல்
கல்வி - நாட்டை ஆளக்கூடிய கல்வி
அறிவு
துணிவுடைமை - துணிச்சலுடன் முடிவுகளை எடுக்கும் திறமை
அம்மூன்றும்
-ஆகிய அம்மூன்று பண்புகளும்
நீங்கா - எப்போதும் நீங்காமல் இருக்கவேண்டும
நிலனாள்பவற்கு - நாட்டை ஆளுவோர்க்கு.
செயலாற்றலில் விழிப்புடன் செயல்படுதல்,
நாட்டை நல்லமுறையில் நடத்திச்செல்லும் கல்வியறிவு, துணிச்சலுடன் முடிவுகளை எடுக்கக்கூடிய
திறமை ஆகிய இம்மூன்று பண்பு நலன்களும் எப்போதும் நீங்காமல் இருக்கக்கூடிய திறனிருக்கவேண்டும்
நாட்டை ஆள்வோர்க்கு, என்பதே இக்குறளின் கருத்து. ஆறு, நான்கு, மூன்று என்று எண்ணிக்கை
குறைப்பில் வரும் குறள். சென்ற குறளில் சொல்லப்பட்ட பண்புகளின் தொடர்ச்சியே இது,
இன்றெனது குறள்:
விழிப்புணர்வு கற்றறிந்தல் நெஞ்சுரமிம் மூன்றும்
செழித்திருக்கும் ஆள்வோர் தமக்கு
vizhippuNarvu kaRRaRindhal
nenjuramim mUnRum
sezhiththurukkum ALvOr thamakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam