மார்ச் 22, 2013

குறளின் குரல் - 344


22nd March 2013

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
                        (குறள் 335: நிலையாமை அதிகாரம்)

Transliteration:
nAcheRRu vikkuLmEl vArAmun nalvinai
mERchenRu seyyap paDum

nAcheRRu – tongue gets tied
vikkuLmEl – the hiccup that comes before breathing last
vArAmun – before that comes (hiccup)
nalvinai – good deeds
mERchenRu – expediently
seyyap paDum – will be done

This verse, talks about impermanence by reminding that one has to do virtuous deeds before his/her tongue loses the ability to speak, and has considerable difficulty to speak, with the constant hiccups – a state indicating the person is end or death is nearer. The passive voice use of “seyyappaDum” poses a question, “by who?”. VaLLuvar does not say it and nobody has asked why? May be every commentator has assumed that it is meant for penitents. However the question, remains if any other poet had written this verse and even the previous verse, would other poets or learned keep quiet and accept it as it is? I only can surmise a sycophatic attitude on the part of commentators that have kept quiet having placed vaLLuvar beyong question on a high pedastal. Though this verse and the chapter also are under the section on penitents, the contents very well fit everyone and the content is not an extraordinary one!

The underlying theme is impermanence. Several moralistic and devotional literature have talked again and again about the subject of impermanence  by reminding us about the end of life conditions, sometimes with full ghastly details to make an impactful case for staying virtuous path. vaLaiyApathi, one of the great five epics of tamil literature says,’ youth will not stay, pleasure will not stay, even the wealth has the same plight. That does not mean there is always misery too. Before the end comes, just like a farmer would plough the land and sow it with seeds, one must do good deeds for good to come in this and subsequent births. Sundarar, and Sambandar have all said the same in the context of staying in the path of devotion.

Before the tongue fails and the hiccup to breath last
Vrtuous deeds done aexpediently for the name to last

தமிழிலே:
நாச்செற்று - நாவானாது அடைத்துப்போர்
விக்குள்மேல் - இறக்கும் தருவாயில் வரும் விக்குதல் போல
வாராமுன் - வருவதற்கு முன்பாக
நல்வினை - நல்ல அறங்களை
மேற்சென்று - விரைவாக முன்னே சென்று
செய்யப்படும் - செய்யப்படும்

இக்குறள், பேசமுடியாத அளவுக்கு நாவடைத்து, விக்கித் (மரணத்தருவாயின் ஆயாசத்தினால்) தடுமாறுமுன்பு, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, நல்ல அறங்களை விரைந்து செய்யப்படும் என்கிறது. செயப்பாட்டு வினையாகச் சொல்லப்பட்டிருப்பதால், யாரால் என்ற கேள்வி எழுகிறது. துறவியலில் இருப்பதால் துறவறம் மேற்கொண்டவர்களால் என்று யூகித்துக்கொள்ளலாம். ஆனாலும் உரையாசிரியர்களும் வள்ளுவர் போலவே மேலோட்டமாக பொருள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். இவ்வாறு யாரால் என்று சொல்லாமல் எழுதியிருப்பதை வள்ளுவரைத் தவிர வேறு யாரேனும் எழுதியிருந்தால் அறிஞருலகம் என்ன சொல்லியிருக்கும்? தவிரவும் இக்குறள் சொல்லியிருக்கும் கருத்தும் எல்லோருக்குமே பொருந்தும்.

ஆனால் குறளின் அடிநாதம் நிலையாமையை நினைவூட்டுவதுதான். இக்குறளின் முற்றுக் கருத்தையும், நிலையாமையையும் சொல்லிய பல இலக்கிய மேற்சான்றுகளைப் பார்ப்போம். வளையாபதிப் பாடலொன்று: “இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்” என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது. பக்தி இலக்கியங்களும் இறைவனை நினைந்து அவன் பதம் அடைய வலியுறுத்துகின்றன நிலையாமையைச் சொல்லி. சம்பந்தர் தேவாரம்,”கனைகொள் இருமல் சூலைநோய் எய்திவந்து நலியாமுன்... கோவலூர் வீரட்டானம் சேர்துமே...” என்கிறது. சுந்தரர் தம்முடைய புறம்பயம் தேவாரத்தில், “புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீ யுரையால் தளர்ந்து அறம்புரிந்து நினைப்ப தாண்மை அரிதுகாண்” என்பார்.

இன்றெனது குறள்:

நல்லாற்றில் சென்றுய்க நாவரண்டு விக்கியுயிர்
இல்லையென் றாகிவோயு முன்
nallARRil senRuiga nAvaraNDu vikkiyuyir
illaiyen RagivOyu mun

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...