23rd March 2013
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
(குறள்
336: நிலையாமை அதிகாரம்)
Transliteration:
nerunal uLanoruvan inRillai ennum
perumai uDaiththuiv vulagu
nerunal - yesterday
uLanoruvan – one who was
there
inRillai ennum – the
state of not living today
perumai uDaiththu –
such glory belongs to
ivvulagu – this world
This world we live in has the glory of making us
realize everyday the truth about impermanence of life on this earth. One who
lived yesterday is no more today. World makes us all to see this everyday the
death of people to realize that none has lived here permanently.
Among the commentators of recent times,
M.Karunanidhi’s commentary does not seem to fit the context of what vaLLuvar
has intended. He says that the world is arrogant and vainglorious about how it
makes people that lived yesterday, no more! Afterall, the world is teaching
impermanence by showing the realities of the world and how can that be
vainglorious?
This thought of impermanence of life has been
touched earlier too other poets like kamban, appar etc.
“Life of yesterday is no more today, the bitter truth of
impermanence
Is the glory of what the
world teaches to us everyday as an essence”
தமிழிலே:
நெருநல் - நேற்று
உளனொருவன் - இருந்த ஒருவன்
இன்றில்லை என்னும் - இன்று
இல்லாமலொழிந்தான் (இறந்துபட்டான்) என்கின்ற
பெருமை உடைத்து - பெருமையினை
உடையது
இவ்வுலகு - இவ்வுலகமானது
இவ்வுலகம் நிலையாமை என்பதை எல்லோருக்கும் உணர்த்துகிற பெருமையைக்கொண்டது! எப்படி?
நேற்று வரை வாழ்ந்த ஒருவன் இன்று இல்லாமல் ஒழிகிறான், இறந்து படுகிறான்! இதை மனிதர்களைத்
தினமும் காணவைத்து, "இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா", என்று கேட்டு, யாருமில்லை என்பதை உணர்த்துகிற
உலகம் பெருமைமிக்க ஒன்றுதானே! தற்காலத்தில்
உரையெழுதியிருக்கிற பலருள்ளும், மு.கருணாநிதியின் உரை குறளின் குறிப்புக்குச் சற்றும்
ஒவ்வாததாக உள்ளது! அவர், “இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை
இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.” என்று பொருள் செய்துள்ளார். உலகு, நிலையாமையை நிலைத்து உலகோருக்கு உணர்த்துவதை
எதற்காக அகந்தை என்று சொல்லுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். திருவள்ளுவர் சொல்லவந்த
கருத்துக்கு முரண் படுகிறார் என்றே தோன்றுகிறது.
கம்பர் இராமகாதையில், நகர் நீங்கு படலத்தில், “பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ பொதுமைத்தன்றோ!
இன்றுளார் நாளை மாள்வார்” என்று சொல்லுகிறார். திருவாய்மொழி, “மின்னின் நிலையில மன்னுயிர்
யாக்கைகள்” என்கிறது. அப்பர் திருக்காட்டுப்பள்ளி
பதிகத்தில், “இன்றுளார் நாளையில்லை எனும்பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்” என்கிறார்.
எல்லாமே நிலையாமையைக் குறித்துக் கூறப்பட்டக் கருத்துக்கள்தாம்.
இன்றெனது
குறள்:
நேற்றிருந்தார் இன்றிறந்தார் என்னும் நிலையாமை
பேற்றினைப் பற்றியதே பார்
nERRirundhAr inRiRandhAr ennum nilaiyAmai
pERRinaip paRRiyadhE pAr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam