21st March 2013
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
(குறள் 343: நிலையாமை அதிகாரம்)
Transliteration:
nALena onRupOR kATTi uyirIrum
vALadhu uNarvArp peRin
nALena onRupOR – A
day is an artificial measure as defined by the daily sun movements
kATTi – showing as such the time has day
and night is a mirage
uyir Irum - it is slowly but surely penetrating the body
cutting it through to kill life
vALadhu – like a sword
uNarvArp peRin – for
those who realize this truth
To make a direct commentary on this verse is rather
difficult. The structure and word ordering does not lend itself to make sense
rightaway. One needs to stretch the imagination and insert some unsaid words to
make sense. The phrase “onRupOR kATTi” has not been explained by anyone
properly, except ParimElazhagar. Most of the commentaries are very superficial
in their substance.
We understand the passage of time by an artificial
indicators of day and night. Day is nothing but a ficticious measure of time.
Time takes us through its passage and kills slowly, but surely like a sword
cuts through the body to finish the life. Those who realize this understand the
impermanence of life.
The phrase “onRupOR” must be understood as “onRu
iruppadhu pOr”, meaning, as if there is something called “Day” really exists.
The word “vALadhu” raises a question, “what is that sword”! We must infer that “Time” has been referred
to as the “sword” here. Similarly, “uNarvAr peRin” must be understood as,
“uNarvAr adhan poRuLai avvAru peRRukkonDAl”. The verse talks about the impermanence
of life citing how the time cuts through life and makes us realize from the
time a soul is born, the count down starts for its imminent demise.
Day is nothing but a conjured up measure of time; truly
It is like a sword that cuts through life slowly but surely
தமிழிலே:
நாளென ஒன்றுபோற் - காலமானது
ஆதித்தன் போன்றவற்றை வைத்து நாள் என்றவொன்றிருப்பதை
காட்டி - காட்டினாலும் (இது
மாயத்தோற்றமே)
உயிர் ஈரும் - (அது) உயிரினை அறுக்கும் (சிறிது சிறிதாகக்)
வாளது - வாள் போன்றது என்று
உணர்வார்ப் பெறின் - அவ்வுண்மையை
உணர்வார்க்கு
இந்த குறளுக்கான உரை
நேரடியாகக் கொள்ளமுடியாதவொன்று. “ஒன்றுபோற் காட்டி” என்பதை விளக்க ஒருவரும் முயலவில்லை,
பரிமேலழகரைத்தவிர. பெரும்பாலும் உரைகள் மேம்போக்கானவையாக இருக்கின்றன. பரிமேலழகர் உரையை
ஒட்டி, நாள் என்றவொன்று இருப்பதை, சூரியனின் மீண்டும் மீண்டும் தோன்றி மறையும் நிகழ்வை
வைத்துக் காண்கிறோம். இது ஒரு மாயத் தோற்றமே, காலத்துக்கு ஒரு சுழற்சியை நாமாக உருவகித்துக்கொள்கிறோம்.
ஆனால் அதுவோ நம்மை ஒரு நேர்கோட்டில் அழைத்துச் சென்று மெதுவாக அறுத்துக்கொல்லும் வாளாக,
காலனாக இருக்கிறது. இதை உணர்பவர்கள் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தவர்கள்.
சொற்களைச் சேர்த்திருக்கும்
விதத்திலே பொருள்கொள்ளச் சற்று கடினமான குறளிது. “ஒன்றுபோற்” என்பதை, “ஒன்று இருப்பது
போற்” என்று கொள்ள வேண்டும். “வாளது” என்று சொன்னதில், “எது வாள்” என்கிற கேள்வி எழும்.
“காலம்” என்பதை மறைத்துச் சொன்னதாகக் கொண்டால் பொருள் எளிதாகும். “உணர்வார்ப் பெறின்”
என்பதும், “உணர்வார் அதன் பொருளை அவ்வாறு பெற்றுகொண்டால்” என்ற பொருளை உணர்த்துவாதாகக்
கொள்ளவேண்டும். இக்குறளின் மூலம் வாழ்க்கையின் நிலையாமையை குறிப்பாக உணர்த்துவதாகக்
கொள்ளவேண்டும். “ஈரும்” என்பதற்கு அறுத்தல் என்ற பொருளைக் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்
மொழி அகராதி கூறுகிறது.
இன்றெனது குறள்:
காலமல்ல நாளென்றால்! வாளாய்
உயிரறுக்கும்
காலனே என்பர்கற் றார்
kAlamalla nALenRAl! vALAi uyirraRukkum
kAlanE enbarkaR RAr
மேற்கண்ட குறளும் குழப்பவே செய்வதால், மீண்டுமொரு முயற்சி..
காலத்தின் மாயளவாம் நாளென்னும்
வாளதுவே
காலனாய் ஈரும் உயிர்
kAlaththin mAyaLavAm nALennum vALadhuvE
kAlanAy Irum uyir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam