மார்ச் 20, 2013

குறளின் குரல் - 342


20th March 2013

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
                        (குறள் 333: நிலையாமை அதிகாரம்)

Transliteration:
aRgA iyalbiRRuch selvam adhupeRRAl
aRkuba AngE cheyal

aRgA – that which does not stay
iyalbiRRuch – such is the nature of
selvam - wealth
adhupeRRAl – when one gets that (wealth)
aRkuba – that which stays in the world (virtuous deeds)
AngE – right then and there (shows the immediacy)
Cheyal – must be done

The nature of wealth is that it does not stay in a place and is impermanent. It may leave a person anytime.  Hence, when somebody has wealth, they need to put it to good use and spend it in virtuous deeds. The word “algudhal” has several meanings in the lexicon. vaLLuvar has used it to denote “that which is permanent”.  The word “algA” means the opposite.

MaNakkuDavar in his commentary says, there are three impermanent things – wealth, youth and the physical body and wealth has been equated to material wealth of money and comforts, which is only partly true. Both youth and physical body are also wealth for every human being. When all these wealths are there, one must indulge in virtuous deeds.

Kambar, has mentioned about the impermanence in mandhirappaDalam through the words of Dasaratha when he is consulting with his ministers about installing Rama as his successor. He says the life under the umbrella of authority, is not permanent and hence wants to let his elder son enjoy the rule of the kingdom. nAlaDiyAr has several verses that reflect the thought completely.

Transitory is the nature of wealth; when attained,
must do virtous deeds for glory to be sustained”

அற்கா - நிலையாத
இயல்பிற்றுச் - தன்மையுடையது
செல்வம்  - செல்வமானது.
அதுபெற்றால் - அச்செல்வத்தை ஒருவர் பெறும்போது
அற்குப - நிலைத்திருக்கக்கூடிய வகையில் (அறச்செயல்களை)
ஆங்கே - உடனே, அங்கேயே
செயல் - செய்துவிடுக.

செல்வம் ஓரிடத்தில் நில்லாத தன்மையது. எப்போதுவேண்டுமானாலும் ஒருவரை அகன்று சென்று விடலாம். அதனால் ஒரு அதைப்பெறும் போதே, புகழ் நிலைத்திருக்கக்கூடியவாறு அறவழிகளில் செலவழித்துவிடவேண்டும். அல்குதல் என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும், நிலைத்திருப்பது என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டிருக்கிறார். அல்கா என்ற சொல், நிலையாமலிருப்பதைக் குறிக்கிறது.

மணக்குடவர் உரையில் நிலையாமையை மூன்று வகையாகச் சொல்லி, செல்வம், இளமை, யாக்கை என்று மூன்றுமே நில்லாதவை என்பார். சற்று சிந்தித்தால் செல்வம் என்பது பணம் மற்றும் வாழ்க்கை வளங்களைக் குறிக்கும். இதோடு இளமையும், உடலும் கூட செல்வங்கள்தாம். எனவே இம்மூன்று செல்வங்களும் பெற்றிருக்கும் போதே இயன்ற அறங்களைச் செய்து விடவேண்டும். அறம் செய்ய, இளமையும் வேண்டும், உடம்பின் வலிமையும் தேவை.

கம்பநாடர் செல்வத்தின் நிலையாமையை, “ கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் பிச்சமும், கவிகையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்று” என்று மந்திரப் படலத்தில்  தயரதன் வாய்மொழியாகக் கூறுவார். நாலடியாரில் வரும் கீழ்கண்ட பாடல்கள் முற்றுக் கருத்தையும் சொல்லுவதைப் பார்க்கலாம். எளிமையானக் கருத்தை படித்த அளவிலேயே புரிந்துகொள்ளும்படியான பாடல்கள் இவை.

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

இன்றெனது குறள்:

செல்வம் நிலையாது ஆதலின் செய்திடுக
செல்வதற்கு முன்னர் அறம்
selvam nilaiyAdhu Adhalin seydhiDuga
selvadhaRku munnaR aRam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...