மார்ச் 19, 2013

குறளின் குரல் - 341


19th March 2013

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
                        (குறள் 332: நிலையாமை அதிகாரம்)
Transliteration:
kUththATTu avaik – In the theater where dramas are staged
kuzhAthth(u) aRRE – like the crowd assembles (slowly)
perunjchelvam – wealth will accumulate (slowly)
pOkkum -  The wealth will perish by expediently
athuviLind(dhu) aRRu – like the theater gets vacant immediately and quickly right after the play is over.

Among all the commentators, Salomon Pappayya, a contemporary scholar of our times, from Madurai, has intepreted this verse differently, which is more impactful. A theater gathers audience slowly before the play begin. Such is the nature of wealth and how it accumulates to a person. But when the play is over,  the crowd disperses in a few minutes. Likewise, the wealth also gets spent, in no time, expediently. The imminence of impermanence is said in this verse using a metaphor of the theater crowd.

Parimelazhagars commentary is a little different. The crowd that gathers to the theater from different places for a common objective of acting in or watching the play will disperse the same way to different places once the objective is done with.  So is wealth. It comes from different ways as a reward of good deeds done in this or earlier births and once the reward is enjoyed it gets spent in different directions. Essentially this verse underlines “impermanence of wealth” by citing this example.

PuRanAnURu, that etched the sketches of life during Sangam period, uses the same  example in the verse 29:22-24. It says that the life in this world is like the actors and the audience that assemble to act in or watch, a play. Once the play is over, they leave the venue where it happens - I has impermanence built in!

“Wealth increases slowly like the crowd gathers in the theater
But it withers away fast, like crowd does with play right after”

தமிழிலே:
கூத்தாட்டு அவைக் - நாடகம் நடத்தப்படும் கூத்தரங்கத்தில்
குழாத்து அற்றே - கூடும் கூட்டம் போல ( சிறுகச் சிறுக ) சேர்வதுதான்
பெருஞ்செல்வம் - மிக்க வளமும் செல்வமும்.
போக்கும்  - அது செலவழிந்து அழியும் விதமோ
அதுவிளிந்து அற்று - நாடகம் முடிந்து உடனே அரங்கம் கூட்டமற்று போவதுபோல!

இந்த குறளுக்கு அண்மையில் உரை செய்திருக்கிற சாலமன் பாப்பையா அவர்களின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு நாடக அரங்கிலே கூட்டமானது, மெதுவாகத்தான் சேரும். அதைப்போலத்தான் ஒருவரிடம் செல்வம் சேருவதும். ஆனால் செல்வம் செல்வழிந்து அழிவதுவோ, அதே நாடக அரங்கத்தில் நாடகம் முடிந்து கலைந்து செல்லும் கூட்டம் போல குறுகிய நேரத்தில் நடந்துவிடும்.

பரிமேலழகர் உரையில் சொல்லும் பொருளின்படி, நாடக அரங்குக்குள்ளே பலவழிகளில் வருகிற கூட்டம் நாடகத்தைப் பார்க்கவருகிற காரணத்தினால் சேர்வதுபோல, நல்வினைப் பயனாகச் செல்வம் பல வழிகளிலும் சேரும். நாடகக்கூட்டம் பார்க்க வந்த நாடகம் முடிந்த வேளையில், அவர்கள் வந்த காரணம் முடிவுற்று, அவர்கள் வந்த வழியே செல்வதுபோல, நல்வினைப் பயன் முடிந்தவுடன், சேர்ந்த செல்வமும், பலவழிகளில் செலவழிந்தும் சென்று விடும்.

புறநானூற்றுப்பாடல் (29:22-24) இதே உவமையைக் கையாண்டிருக்கிறது. “விழவின் கோடியர் நீர்மை போல முறை முறை ஆடுநர் கழியுமிவ் உலகத்துக்கூடிய” என்ற வரிகள் “விழாவில் ஆடிக் களிக்கக் கூடிப் பின் மறைகின்ற கூத்தையும் கூத்து நிகழ்த்துபவர்களையும் போலத் தோன்றி, மறைந்து தொடர்ந்து வரும் இயல்புடைய இவ்வுலக வாழ்வில்” என்று நிலையாமையை பற்றிய குறிப்பை உணர்த்துகிறது,

இன்றெனது குறள்:
மெல்லவருஞ் செல்வமெலாம் கூத்தரங்கக் கூட்டம்போல்
இல்லையென்று ஆகும் விரைந்து

mellavarunj chelvamelAm kUththarangak kUTTampOl
illaitenRu Agum muDindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...