மார்ச் 18, 2013

குறளின் குரல் - 340


34:  (Impermanence - நிலையாமை)
[One of the most important topics that has consumed thelogical discussions for ages is the “Impermanence” of anything and everything in Universe, except the supreme Godhead for believers in God, and not even that for non-believers. Impermanence is associated with the concept of time. With time everything changes. Every living second or any tiny fraction of it, changes are happening in every living form, even in things we see as permanent. The cocept of what is born must also perish, is also tied to impermanence. Unless the awareness and knowledge of this impermanence sets in, human mind will not leave the attachment of worldly objects of perceived pleasure or be in misery of transient pains. The verses in this chapter mainly address the ignorance of some who think the body and soul are connected and the state of well being as permanent when the going is good and lead the readers towards the enlightenment.]

18th March 2013

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
                        (குறள் 331: நிலையாமை அதிகாரம்)

Transliteration:
nillAdha vaRRai nilaiyina enRuNarum
pullaRi vANmai kaDai

nillAdhavaRRai – that which does not stay in a place
nilaiyina – as if it is permanent (could be life or wealth)
enRuNarum – thinking as such with
pullaRivANmai – unsound and imperfect knowledge
kaDai – is truly lowly

In this very first verse, vaLLuvar, discards the people that have imperfect or unsound knowledge thinking all that is never permanent as permanent and act with attachment towards worldly pleasures, wealth and even this life. For ascetics it is even more applicable, as attachments are anti-directional to salvation and realizing the higher truth. kI.vA.jA’s compilation quotes two verses from Sundarar’s ThEvAram and kambarAmAyaNam.

poiththanmaith thAya mAyap pOrvaiyai meiyenReNNum viththagath thAya vAzhvu vENDi nAn virumbakillEn”, says Sundarar. He refers to “impermanence” as a “deceptive blanket that this body is”. He does not need a life that makes him think the façade of life is real and true. Kambar says, “ninRum senRum vAzhvana yAvum nilaiyAvAl ponRum enRum meimai uNarndhAm..” He says that all we see as standing and going to live, will perish without permanence.

“To have imperfect knowledge and think unstable
 And impermanent will stay, not perish is ignoble”

தமிழிலே:
நில்லாதவற்றை - நிலையில்லாமல் ஓரிடம் தங்காதவற்றை
நிலையின - ஏதோ நிலையாயிருப்பன (செல்வம், உயிர், வாழ்வு எல்லாம்)
என்றுணரும் - என்று நினைக்கின்ற
புல்லறிவாண்மை - சிற்றறிவுடமை
கடை - இழிவானது

இவ்வதிகாரத்தின் முதல் குறளிலே, வள்ளுவர் வாழ்வும், வளமும் நிலையாதனவாயிருந்தும், அவற்றை நிலையானவை என்று உலகியல் தரும் நிலைக்காத போலி மகிழ்ச்சிகளில் இருப்பவர்களைப்பார்த்து, அவர்களுடைய சிற்றறிவு நோக்கு இழிவானது என்று இகழ்கிறார். துறவிகளுக்கு இது இன்னும் பொருந்துவதாகும். ஏனெனில் பற்று என்பது முக்திக்கும், உயர்பொருளை அடைவதற்கு எதிர்த்திசையில் இருப்பது. கி.வா.ஜ அவர்களின் உரையில்  சுந்தரரின் தேவாரம், மற்றும் கம்பராமாயணம் இவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டுகிறார்.

“பொய்த்தன்மைத்தாய மாயப்போர்வையை மெய்யென்றெண்ணும் வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்” என்கிறார் சுந்தரர். நிலையாமையை மாயப்போர்வை என்று சொல்லி, அத்தகைய மாயத்தை மெய்யென்று எண்ணும் வித்தகம் உடைய வாழ்வு எனக்குத் தேவையில்லை என்கிறார். கம்பர் மாரீச வதை படலத்தில், “ நின்றும் செந்றும் வாழ்வன யாவும் நிலையாவால் பொன்றும் என்றும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்கொன்றும் உன்னாய்”  என்று இராவணனுக்கு மாரீசன் அறிவுரை சொல்லுகிறார். இவ்வுலகில் அசையாமல் இருப்பவையும், பலவிடங்களுக்குச் செல்வதாய இயங்கு பொருள்களும், ஆக அனைத்துமே அழிந்து போகும் என்ற உண்மையை உணர்ந்துள்ளோம். ஆகையால் இழிந்த தொழிலை சிந்திக்காதே என்று இராவணனுக்கு முறையானவற்றை மாரீசன் சொல்கிற பாடல் இது.

இன்றெனது குறள்:

நிலையென் றிலாதனக் கொள்ளு மறிவின்
இலையிழிந்த சிற்றறி வே
nilayen RilAdhanak koLLu maRivin
ilaiyizhinda chiRRaRi vE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...