மார்ச் 13, 2013

குறளின் குரல் - 333


12th March 2013

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
                       (குறள் 325: கொல்லாமை அதிகாரம்)

Transliteration:
Nilaiyanji nIththAruL ellAm kolaiyanjik
kollAmai sUzhvAn thalai

Nilaiyanji – Afraid of the treacherous cycle of birth and death
nIththAruL ellAm – among those who took penitence (as an escape route)
kolaiyanjik – those who are afraid of the sin of killing for food and sustenance
kollAmai sUzhvAn – and practice “not killing” as the primary virtue
thalai – are in the forefront of penitence.

The word “anchudhal” means to be fearful. Penitence is not undertaken because of the fear of life, but to go towards a higher truth. It is never, detesting one over another or in comparison. Such comparing mind is fundamentally an unstable mind. Understanding the merits of something to pursue is different from, fearing the repurcussions and seeking an alternative. It is like seeking asylum or refuge, a state not befitting the glory of penitence. Similarly not killing other life forms for sustenance should be out of compassion not because it is sinful. Such thinking demertis the value of act and puts it as a barter – of accumulating merits to go towards higher goal; does not befit the desire-free status that penitence prescribes.

The above longwinded explanation was required before writing any commentary for this verse. The use of word, “anchi”, as applied in this verse is only meant for pseudo penitents – probably to be construed as an advice or virtuous statement for such pseudo penitents.

Among all that undertake ascetic path to avoid the pains of birth-death cycle, those who do not kill for self-sustenance or food are better and in the forefront of penitents

The thought that the cycle of birth and death is according to ones own merits and sins of any birth and the birth itself is a punishment of sins of previous births, is a grave one espoused again and again in all code books of morality. It is such defeatist attitude and only people of utter low self-esteem can feel that, even among penitents. It is intuitively counter thought to finding higher truth. Present life, regardless of pursued path is for pride of life and celebration of that. Even the ascetics, though unattached, are for the good of larger society. Fearful of something does not fit their profile.

“Among all the pursuant penitents, fearing the cycle of life and death
Who do not kill for their self sustenance are the front runners of truth”

தமிழிலே:
நிலைஅஞ்சி - பிறந்திறக்கும் கொடுமையான நிலையினை அஞ்சி
நீத்தாருள் எல்லாம் - துறவு மேற்கொண்டவர்களுக்குள் எல்லாம்
கொலைஅஞ்சிக் - கொன்றுண்ணும் இழிமைக்கும், அதனால் வரும் பாவத்துக்கும் அஞ்சி
கொல்லாமை சூழ்வான் - கொல்லாமையை தன்னுடைய தலையாய அறமாகக் கொள்ளுவாரே
தலை - துறவறத்தில் முன்னிருப்பவர்கள்

அஞ்சுதல் என்பது ஒன்றைக் கண்டு பயப்படுவது. துறவு என்பது வாழ்வின் நிலையாமையைக் கண்டு பயப்படுவதால் மேற்கொள்ளப்படுவது அல்ல. அது ஓருயர் உண்மையை நாடிக்கொள்ளப்படும் நிலை. ஒன்றைக் கண்டு வெறுத்து வேறொன்றைக்கொள்வது, ஒப்பு நோக்கி, இதைவிட அது சிறந்தது என்கிற மனநிலை. அடிப்படையில் நிலையில்லா மனம்கொள்ளும் நிலை. கொலைச் செய்வதற்கு அஞ்சிக் கொள்ளும் கொல்லா நோன்பும் அதேபோன்றதே. கொல்லாமை என்பது பிறவுயிர்களிடத்தும் கொள்ளும் கருணையால் ஏற்படவேண்டும். அதைப் பாவம் என்கிற மனப்போக்கு, புண்ணியத்தை விழைகிற மனமாகிறது,  விழைவு உன்னதமானதாயிருந்தாலும், அது துறவு என்கிற சொல்லுக்கே பொருந்தாதது.

இக்குறளுக்குப் பொருள் சொல்வதற்கு முன் இந்த விளக்கம் தேவையாகிறது. “அஞ்சி” என்கிற சொல் பயனாகியிருக்கிற விதம், போலித் துறவிகளுக்கே பொருந்துவதாயிருக்கிறது. வேண்டுமானால் போலித் துறவிகளுக்குச் சொல்லப்பட்ட அறி/அற உரையாகக் கொள்ளலாம்.

உண்மையாக உயர்பொருளறிவுக்காக நயவாமல் ஒன்றுக்கு பயந்து, துறவு கொள்ளலை விட, கொல்லுதல் கொணரும் பாவத்துக்கு பயந்து கொல்லுதலை ஒழித்தவரே மேலாம். இதையே இக்குறள் சொல்லும் கருத்தாகக் கொள்ளவேண்டும்.

பிறந்திறப்பது, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற ஒரு சுழற்சி என்றும், அதைப் பெரும் அவலம் என்றே எல்லா அற நூல்களும் கூறுவதால், பிறந்திருக்கும் பிறப்பும் அவ்வாறே என்றாகிறது. இதை ஒரு உச்சகட்ட தாழ்வு மனப்பான்மை என்றே கருதவேண்டும். பிறந்த வாழ்வைக் கொண்டாடும் ஒரு மனப்பாங்கை வளர்க்காதது. இது துறவிகளாக இருப்பவருக்கும்கூட பொருந்தும். பற்றற்று வாழ்ந்து பாரில் உள்ளோரின் நன்மைக்காகத் தவமியற்றும் துறவிகளுக்கு எதற்கும் அஞ்சுவது ஏற்புடையது அல்ல.

அறநெறிச்சாரப் பாடல் ஒன்று, கொன்று தின்னாமையே துறவினாலாகும் பயனைக் கொடுக்கவல்லது என்னும் கருத்தில் கீழ்கண்ட பாடலைச் சொல்லுகிறது.

கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து

அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்

இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே

படுத்தானாந் தன்னைத் தவம்

இன்றெனது குறள்:

பிறந்திறப்ப தஞ்சி துறப்போரின் கொல்லல்
துறப்போர் உயர்ந்தவ ராம்
piRandhiRappa dhanji thuRappOrin kollal
thuRappOr uyarndhava rAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...