மார்ச் 13, 2013

குறளின் குரல் - 335


13th March 2013

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
                       (குறள் 326: கொல்லாமை அதிகாரம்)

Transliteration:
kollAmai mERkoN DozhuguvAn vAzhnALmEl
sellAdhu uyiruNNum kURRu

kollAmai – The virtue of not killing to feed self for life,
mERkoND(u) – to hold that (virtue of not killing) as personal discipline and virtue
ozhuguvAn  - and be in ascetic pursuit
vAzhnAL – their living days
mEl sellAdhu – will not go, to take away (what)
uyiruNNum – one who takes away life from living beings
kURRu – The lord of death, Yama.

The lord of death will not rush to take away the life of a person that is resolved not to kill other life forms, for self-sustenance, and will let them live long.

All commentators including Parimelazhagar have had considerable difficuty intepreting this verse, which is apparent reading the commentary.To be truly devoid of the twin state of life and death, one must pass the path of present life in good stead. The exalted state of being a  siranjivi (permanent life) is read /heard only in puranic stories. In ordinary worldly life it is almost never seen. The best we can hope is that such virtuous people may sustain and live long in this world is attributed Yama, the lord of death allowing them to live.

The virtue of not killing needs to be emphasized. One who steads by that will reach the state devoid of birth and death cycle subsequent to the present birth. Hence the Lord of death will not be behind that soul for ever - is the meaning to be construed here.

Kambar says it nicely in his description of the people of KOsalA. “kURRam illaiyOr kuRRam ilAmaiyAl”. Since the country of KosalA is devoid of any sinful and unlawful acts, the people of Kosala live long and happy without the fear of death and hence the lord of death is not there in KosalA. It is very mucha a Chirstian thought to say the wages of sin is death. Bible says, “For the wages of sin is death, but the gift of God is eternal life”.  Such a thought is not held in Hindu theology. The atonement in subsequent births and eventually attaining mukthi is what the hindu holy texts prescribe.

“Even the Lord of Death will not dare to take away
The life of a person that does not kill for self stay”

தமிழிலே:
கொல்லாமை - உயிர்கொன்று உடம்பினை ஓம்பாத கொல்லாமையாகிய அறத்தை
மேற்கொண்(டு) - தம்முடைய அறமாகக் கொண்டு
ஒழுகுவான் - தம்முடைய துறவறத்தில் ஒழுகுபவர்கள்
வாழ்நாள் - அவர்கள் வாழ்கின்ற நாளினை
மேல் செல்லாது - பரித்துக்கொள்வதற்கு செல்லமாட்டான்
உயிருண்ணுங் - பாசக்கயிற்றால் உயிரைக் கொண்டு செல்லும்
கூற்று - கூற்றுவனாகிய எமன்

கொல்லாமையாகிய அறத்தை தன்னுடைய மேலான அறமாகக் கொண்டு வாழ்பவர்களின் உயிரை உண்ண கூற்றுவனும் செல்லமாட்டான் என்பது இக்குறளின் கருத்து.

இக்குறளுக்குப் பொருள் சொல்வதற்கும் பரிமேலழகர் உள்ளிட்ட அத்துணை உரையாசிரியகளும் சிறிது தடுமாறியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். பிறப்பு, இறப்பு என்ற இருமை இல்லாத நிலையென்பது, இப்பிறப்புக்கு பிறகு எய்தகூடிய ஒன்றே. சிரஞ்சீவி என்கிற நிலை இருப்பதாக நாம் படித்தாலும், உலகியல் வாழ்வில் நாம் அதைப் பார்ப்பதில்லை. கூற்று அவ்வுயிர்களை உலகில் நீண்டகாலம் வாழ அனுமதிக்கும் என்பது வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

கொல்லாமையாகிய அறம் வலியுறுத்தப்படவேண்டிய ஒன்றுதான். அதை மேலான அறமாகக் கொண்டொழுகுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் மீண்டும் பிறப்பும் அதனால் இறப்பும் கிடையாது என்கிற கூற்றும், அதனால் கூற்றுவன் அவர்கள் வாழ்வை முடிக்கச் செல்ல வேண்டியதில்லை என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

கம்பராமாயண நாட்டுப்படலத்தில், “கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்” (79) என்று கோசல நாட்டு மக்களின் நிலையைச் சொல்லியிருப்பார். குற்றங்கள் இல்லாமையால், அந்நாட்டினருக்கு மரண பயம் இல்லையாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலியத்தின் வாக்கு. இந்திய சமயச் சிந்தனையில், பிறந்திறந்து பண்படுபவதே ஒவ்வொரு ஆத்மாவுக்கும் விதிக்கப்படுவது.

இன்றெனது குறள்:

கொல்லாமை கொண்டொழுகின் கொள்ளாது கூற்றமும்
நல்லாரின் நாளை நயந்து
kollAmai koNDozhugin koLLAdhu kURRamum
nallArin nALai nayandhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...