14th March 2013
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க
தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
(குறள் 327: கொல்லாமை அதிகாரம்)
Transliteration:
Thannuyir
nIppinum seyyaRka thAnpiRidhu
Innuyir
nIkkum vinai
Thannuyir – life of self
nIppinum – even if have to readily sacrifice
seyyaRka – donot do
thAnpiRidhu – other lifeforms (by self)
Innuyir – their life
nIkkum – removing (by killing)
vinai – deeds.
The word “piRidhu” in this verse clearly refers to live
forms devoid of sixth sense, and inferior to humans. Even at the cost losing of
life, one should not kill other lives for self-sustenance. Since, killing other
lives amounts to sinning, one must desist that.
Though this verse has been said as an epitome of the
virtue of not killing, is it realistically possible, even for the renounced
ones to not kill, facing the danger being killed? Or even when there is extreme
hunger? VaLLuvar has already said in the verse 259, (refusing meat) that
instead of doing thousands of fire sacrifices, not killing another life for
eating and self-preservation is better, which we may want to recall here. (avi sorindhAyiram
vETTalin onRan uyir seguththuNNAmai nanRu). The same thought is said in the context of “not
killing” here.
“Even at
the cost losing life of self, renounced must
Desist the deed of killing another for virtue
to persist”
தமிழிலே:
தன்னுயிர் - தன்னுடைய உயிரையே
நீப்பினும் - நீங்கவேண்டியிருந்தாலும்
செய்யற்க - ஒருவர் செய்யக்கூடாது
தான்பிறிது - தானாக பிற உயிரினங்களின்
இன்னுயிர் - அவற்றுக்கும் இனிமையாகவே விளங்கும் உயிரினை
நீக்கும் - நீக்கக்கூடிய (கொல்வதன்மூலம்)
வினை - செயல்களை.
பிறிதின் இன்னுயிர் என்றதால் அஃறிணை
உயிர்களைக்குறித்தே சொல்லியிருப்பது தெளிகிறது. ஒருவன் தன்னுயிர் நீங்ககூடிய நிலையிலும்
தன்னைத் தாக்கவரும் மற்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்று இக்குறள் அறிவுறுத்துவதாகத்
தெரிகிறது. பிறவுயிர்களைக் கொல்லுதலால் பாவம் வருமாதலால், அது தன்னுயிர்க்கே தீம்பாயினும்
விலக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது.
இது கொல்லாமையின் உச்சமாகச் சொல்லப்பட்டாலும்,
உண்மையில் நடக்ககூடியதா, துறவிகளாகவே இருந்தாலும்? தனக்கு உணவு இல்லை என்றாலும், அதனால்
பசியில் வருந்தி உயிரிழக்க நேரிடினும் மற்றொரு உயிரினைக் கொல்லாமை என்பது வேண்டுமானால்
துறவிகளால் இயன்றதாகக் கொள்ளலாம். இதே கருத்தை புலால் மறுத்தல் அதிகாரத்தில் (குறள்
எண் 259) “அவி சொரிந் தாயிரம் வேட்டலின்
ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று” என்று வள்ளுவரே சொல்லியிருப்பதை நினைவு கூறவேண்டும்.
இன்றெனது குறள்:
பிறவுயிர் போக்கிடும்
பாழ்வினை போற்றீர்
இறப்பினும் இன்னுயிர்
ஈந்து
piRavuyir pOkkiDum pAzvinai pORRIr
iRappinum innuyir Indhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam