9th March 2013
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
(குறள் 322: கொல்லாமை அதிகாரம்)
Transliteration:
paguththuNDu
palluyir Ombudhal nUlOr
thoguththavaRRuL
ellAm thalai
paguththuNDu – Sharing what one eats
palluyir - with other living beings (Parimelazhagar says
five types of lives, may be alluding to the lower living beings of one to five senses)
Ombudhal – and protect them (implying not killing them)
nUlOr – people of high erudition with the knowedge from
various scriptures
thoguththavaRRuL
ellAm – among all that they have compiled
to be the virtuous deeds
thalai – is the foremost.
Sharing the food with other life
forms, especially inferior, devoid of sixth sense and protect them are among
the foremost among all virtues, as preached by scholarly superior being - the
quintessence of this verse..
Since this chapter and verse are
also under the part about penitence, it is said in the context of penitents and
how they should conduct themselves. Penitents get alms from other for their
food, which is prescribed to them as an austerity. Obviolsy vaLLuvar does not
imply sharing the food with fellow humans as penitents themselves seek alms for
their daily sustenance. Also, earlier we have seen, the householder’s prescribed
virtuous duties should also including taking care the penitents. Hence it
becomes very clear, that penitents have nothing to share which is their own.
What they have in their possession is undiluted compassion and love for other
live forms. Hence they have to take care all lives that are devoid sixth sense.
Share what you eat with other lives and protect the life forms, inferior
This is the epitome of virtue as compiled by erudite, scholarly superior
தமிழிலே:
பகுத்துண்டு - தனக்கு உணவாயதை (பசித்த உயிர்களுடன்) பகிர்ந்து உண்டு
பல்லுயிர் - பல உயிர்களையும் (பரிமேலழகர் ஐவகை உயிர்கள் என்பார். அவர் அதிகாரத்திலேயே
காட்டியபடி, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்கள்)
ஓம்புதல் - அவற்றைப் பேணிப் பாதுகாத்தல்
நூலோர் - நல்ல நீதி நூல்களைக் கற்றறிந்த சான்றோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் - நீதிவழிகள் என்று தொகுத்த கோட்பாடுகளுள் எல்லாவற்றிலும்
தலை - முதன்மையானது, உச்சமானது.
தம்மிடமுள்ள உணவை பசித்த உயிர்களுடன் பகிர்ந்து உண்டு, பல்வேறு அறிவு நிலைகளிலிருக்கும்
உயிர்களையும் பேணிப் பாதுகின்ற நெறியே நல்ல பல நூல்களைத் தேர்ந்தோர் தொகுத்து வாழும்
நெறிகளாக அளித்தவற்றுள் முதலாயதாம். இதுவே இக்குறளின் கருத்து.
இக்குறளும் துறவறவியலில் வருவதாகையால், துறவறத்திலிருப்போர் பிறரிடம் அன்றாடம்
உணவு பிச்சையாகப்பெற்று உண்பவர்களாகையால், அவர்கள் மற்ற மனிதர்களோடு பகிர்ந்து உண்ணலை
வள்ளுவர் குறிக்கவில்லை என்பது அறியப்படுகிறது. இல்லறத்தோர் அறத்தைப் பற்றிக் கூறும்போது,
அவர்கள் புரக்கவேண்டியவர்களுள் துறவியரும் அடக்கமாகையால், துறவியரின் உணவு பிறரிடமிருந்து
பெறப்படுபவது என்பதும் உறுதியாகிறது. துறவிகள் உயிருள்ள எல்லாவற்றுக்கும் அன்பு காட்டவேண்டியவர்கள்
ஆதலால், அவர்கள் புரக்கவேண்டியவை ஓரறிவு முதல் ஐந்தறிவுள்ள உயிரினங்களைத்தான்.
இன்றெனது குறள்:
நூன்மறையோர் சாற்றியதுள்
உச்சநெறி பல்லுயிர்க்கும்
தான்பகிர்ந்து
உண்டுமகிழ் பண்பு
nUnmaRaiyOr sARRiyaduL ucchaneRi palluyirkkum
thAnpagirndhu uNDumagizh paNbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam