33: (Not killing - கொல்லாமை)
[This
chapter on “not killing” is to primarily promote vegetarianism and is directed towards penitents.
ParimElazhagar in his beginning commentary clearly says, that this chapter is
about not killing lives of five senses to single sense and has excluded thus,
killing of human beings with sixth sense. He has already touched on the subject of not eating meat for survival
earlier in the chapter of “refusing meat”. Here he has continued
the same thought in the context of killing. Just because he has not mentioned about
not killing human beings, it is not to be construed that he indirectly allows
it or ignores it. He understands the ways of human life and knows that the
aspirations of expanding territories, or rendering justice, in some contexts, killing
other humanbeings is unavoidable]
8th March 2013
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
(குறள் 321: கொல்லாமை அதிகாரம்)
Transliteration:
aRavinai
yAdhenin kollAmai kORal
piRavinai
ellAm tharum
aRavinai
yAdhenin – what is virtuous deed?
kollAmai – For own gain, not killing other lives is!
kORal – But, if indulge to kill
piRavinai –evil deeds
ellAm
tharum - will result in all other (evil
deeds)
This first verse of this chapter insists that
“not killing” is virtuous. Killing for any reason will bring other non-virtuous
deeds, as repurcussions, for the killer. In general, “not killing” implies, for
ones own “food needs” or because of enemity, killing of other lives is not
good. We have already seen the same thought in “Refusing Meat” chapter in the verse “ aruLalladhu yAdheniR kollAmai kORal poruLaladhu avvUn thinal” where
he had emphasized the thought of not killing, by saying “killing
the thought of not killing” is not graceful - a double negative to emphasize the virtue.
The use of two words consecutively to imply
two different contexts has been very nicely employed by vaLLuvar in these two
verses. “kollAmai koRal” is used as a single phrase to mean, “killing the thought of not killing”. In
the verse of this chapter, he has used an implicit “comma” to separate the words
“kollAmai” and “kOral” to be part of two different sentences to emphasize not
killing and iwhat happens if one indulges in killing.
“Not
killing is equivalent to all virtues collectively.
Killing will bring the doer all evil deeds
definitely”
அறவினை யாதெனின் - அறச்செயல் எதுவென்றால்
கொல்லாமை - பிற உயிர்களைக் கொல்லாமையாம்
கோறல் - பிற உயிர்களை கொல்லுதல்
பிறவினை - மற்ற வினைககள் (தீவினைகள) , அதாவது கொலைப்பாவம் விளைவிக்கும் மற்ற தீயவை.
எல்லாந் தரும் - எல்லாவற்றையும் தந்துவிடும்
கொல்லாமை அதிகாரத்தின் முதற்குறளில், கொல்லாமையை அறமென்றும், கொல்லுதல் பிற
தீவினைகளைத் தரும் என்று பொதுவாகச் சொல்லுகிறார். கொல்லாமை என்பது தன்னுடைய உடம்பினைப்
பேணுவதற்கோ, அல்லது, பகை காரணமாகவோ பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதாகும். வள்ளுவர் இதே கருத்தை வேறுவிதமாக புலால்
மறுத்தல் அதிகாரத்திலும் கூறியிருப்பார். “அருளல்ல
தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன்
தினல்” இக்குறளில் இரண்டு எதிர்வினைகளைக் கூறி கொல்லுதல்
அருளல்லது என்றிருப்பார்.
இவ்விரண்டு குறளிலும் உள்ள கவிதையழகு பொதுவாகக்
காணப்படாத ஒன்று. புலால் மறுத்தல் அதிகாரத்தில்
“கொல்லாமை கோறல்” என்று ஒன்றாகச் சேர்ந்து,
கொல்லாமையைக் கொல்வது, அதாவது, “கொல்வது”
என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டது. இவ்வதிகாரத்தில் , அதே சொற்றொடர், இரண்டு
தனித்தனிச் சொற்றொடர்களில் கொல்லாமை என்பது முதற்பகுதிக்கு, கொல்லாமையை வலியுறுத்தியும்,
கோறல் என்பது பின்வரும் பகுதிக்கு, “அப்படிக்கொன்றால்”, என்று விளவு குறித்து பேசுவதற்கும்
பயன்படுத்தியுள்ளார்.
இன்றெனது குறள்:
கொல்லாமை தானறச்
செய்கை - பிறவினைகள்
கொல்லுதலால்
சேர்ந்து வரும்
(கொல்லாமைதான்
அறச் செய்கை - பிறவினைகள் கொல்லுதலால் சேர்ந்து வரும்)
kollAmai thAnaRach seigai
- piRavinaigaL
kolludhalAl sErndhu varum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam