10th March 2013
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
(குறள் 323: கொல்லாமை அதிகாரம்)
Translitetration:
onRaga
nalladhu kollAmai maRRadhan
pinsArap
poyyAmai nanRu
onRaga
nalladhu – none compare to itself
kollAmai – such virtue is not killing for ones own food
maRRadhan
pinsArap – other than that, one must also
follow closely
poyyAmai
nanRu – not saying lies as the next good
virtue to practice.
Once again through this verse, vaLLuvar reinforces
“not killing” as the primary virtue for penitents with none other to compare
with it. The virtue that comes
accompanying to this primary virtue is “not lying”. The words “kollAmai” and “poyyAmai” are not rhyming in the sense of thamizh poetic constructs
and that could not have been reason for using them in this verse. It is
surprising that vaLLuvar has brought another virtue which has been discussed
already in the chapter of “Truth” as a prime virtue.
While other commentators have interpreted the
verse, as it is said, without even putting forth a simple question as to why
vaLLuvar brought these virtues together, Parimelazhagar has cited verses from
earlier chapters. He quotes “poyyAmai poyyAmai ARRin” and “yAm meyyak kaNDavaRRuL illai” and asks
why would vaLLuvar bring “poyyAmai” in this context. His explanation is
somewhat unconvincing, though. Only vaLLuvar would know his reasons.
For Ascetic
pursuit, the foremost and the first is not killing
And that which
follows as a companion virtue is “not lying”
மீண்டும் இக்குறள்
வழியாக கொல்லாமையை வலியுறுத்துகிற வள்ளுவர், துறவு நெறியினருக்கு வேண்டிய இன்றியமையாத
அறம், தனக்கு ஒப்புமை சொல்லவியலாத ஒன்றாக இருப்பது கொல்லாமையாகிய அறம்தான். அதில் நிற்கும்
துறவறத்தோர், அவ்வறத்துக்குப் பிறகு கடைபிடிக்கவேண்டிய அறம் பொய்யாமையாகிய, வாய்மையைக்
கடைபிடித்தல் தான்.
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின்”
எனவும், “யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை”
எனவும் சொல்லியிருந்த வள்ளுவர், இங்கே
இவ்வாறு சொல்வதென்றால் எது உண்மையிலேயே முதலாய அறம் என்ற ஐயம் ஏற்படும் அல்லவா? அதற்காக,
இவ்வதிகாரத்திற்கு தொடர்பில்லை என்றாலும் பொய்யாமையைப் பற்றியும் அடுத்த சிறந்த கடைபிடிக்கவேண்டிய
அறமாகக் கூறுவதாக, பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் அவரும் கூட “கொல்லாமை ஒழிந்தால் பொய்யாமை
அதன் பின்னே நிற்க நன்று” என்பது எப்படிப்படித்தாலும் பொருள் பொதிந்து வரவில்லை, அதுவு
இவ்வதிகாரத்தைச் சார்ந்து படிக்கையிலே!
ஆனால், உரையாசிரியகள் பலரும் கொல்லாமை அதிகாரத்தில் ஏன்
பொய்யாமையோடு ஒப்புமையேன் என்ற கேள்வியைக் கேட்கவில்லை, பரிமேலழகரைத் தவிர.
நல்லதான கொல்லாமையும், அதனோடு பொய்யாமையும் ஒன்றாக நன்றாம்
துறவோருக்கு என்று படித்தால் ஓரளவுக்கு பொருள் பொருந்துகிறது. ஆனால் கொல்லாமை அதிகாரத்தில்
பொய்யாமை பற்றி எதற்காக? வள்ளுவரே அறிவார்.
தமிழிலே:
ஒன்றாக நல்லது - தனக்கு இணையென்று ஏதும் இல்லாத
நற்பண்பு
கொல்லாமை - பிறவுயிர்களை தம்முணவுக்காய் கொல்லாமல் இருத்தல்
மற்றதன் பின்சாரப் - மற்று அதற்கு அடுத்து
ஒருவர் கடைபிடிக்கக்கூடிய, வேண்டிய அறம்
பொய்யாமை நன்று - பொய்யாமை அல்லது வாய்மையே கடைபிடிப்பது, அது நன்றுமாம்
இன்றெனது குறள்:
பொய்யாமை நன்றே அதனோடு கொல்லாமை
மெய்யான மேலாய
நன்று
poyyAmai nanRE adhanODu kollAmai
meyyAna mElAya nanRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam