5th March 2013
தன்னுயிர்க் கின்னாமை
தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
(குறள்
318: இன்னாசெய்யாமை அதிகாரம்)
Transliteration:
Thannuyirk kinnAmai thAnaRivAN enkolO
Mannuyirk kinnA seyal?
Thannuyirkku – For ones own life
innAmai – the harm done by
others is hurtful
thAn aRivAN – realized as
such, personally being subject to
enkolO – how come?
Mannuyirkku – for others in
the world
innA seyal? – the same person
do harmful things?
When someone has personally experienced the hurt of
harm caused by others, why would he or she think of causing harm to others? –
This is the substance of this verse as we read it.
But the verse also has other implied meanings to
it. When one has undergone the hurt of
harm caused by others, that should result in a resolve to not do the same to
others having gone thorugh the pain of the same – even to the person that
caused the harm. This verse indirectly reemphasizes the collective thoughts
conveyed through, the chapters on forbearance and avoiding anger. Reiterates
the need to have a vengeance free mentality.
Once again, we have to bear in mind that the entire
chapter and all the verses here in are from the major section of Ascetic Path.
(thuRavaRa iyal). They are advisory in nature to the people of ascetic pursuit
– not the already enlightened ones. The arduous path to enlightment of an
ascetic has many challenges and this is posed as another virtue related
question to the pursuant, specific to harm caused to others.
Pazhamozi nAnUru and BhAratha veNpA have poems that
stress the same thought as an assertion, instead of posing it as a question.
“Having experienced personally the harm done by others is hurtful
How can someone do the
same to others in the world, be harmful?
தமிழிலே:
தன்னுயிர்க்கு - தன்னுடைய உயிர்க்கு
இன்னாமை - பிறர் செய்யும் இன்னா, துன்பம்
என்று
தானறிவான் - தாமே உணர்ந்தவர்கள்
என்கொலோ - எவ்வாறு, ஏன், என்ன காரணத்தால்
மன்னுயிர்க்கு - உலகில் உள்ள மற்ற உயிர்களுக்குத்
இன்னா செயல் - துன்பம் செய்வதாம்?
ஒருவர் தமக்குப் பிறர்
செய்யும் துன்பம் தம்முயிர்க்கு எவ்வளவு துன்பம் தருகிறது என்று உணர்ந்த பின்னரும்
மற்றவர்களுக்கு துன்பம் செய்வதை எவ்வாறு நினைக்கலாம் ஒருவர்? இதுவே இக்குறளைப் படிக்கும்
போது நாம் புரிந்துகொள்வது.
ஆனால் இக்குறள் வேறொரு
கருத்தையும் உள்ளடக்கியது. ஒருவர் தமக்கு பிறரால் துன்பம் வரும்போது, அதற்காக வருந்தும்போது
அக்கொடுமையை பிறருக்குச் செய்யக்கூடாது என்று நினைக்கவேண்டும், அது அத்துன்பத்தைச்
செய்தவருக்காயிருந்தாலும்! இதன்மூலம் பொறையுடைமை, சினவாமை என்ற அதிகாரங்களில் சொல்லப்பட்ட
கருத்துக்களை மீண்டும் வலியுறுத்துகிறார். வஞ்சமில்லா நெஞ்சோடு இருக்கவேண்டியதையும்
அடிக்கோடிடுகிறார்.
மீண்டும் மீண்டும்
நினைவில் கொள்ளவேண்டியது இக்குறளும், அதிகாரமும் கூட துறவறவியலில் கீழே வருவதால், இதுவும்
துறவு மேற்கொண்டவர்களுக்காகச் சொல்லப்பட்டதாக
கொள்ளலாம். துறவில் நாட்டம் கொண்டு, மேற்ககொள்பவர்கள்
எல்லோரும் துறவிகளாகிவிடுவதில்லை. துறவுப் பாதை நீண்ட கடினமான பாதை. மேற்கொள்பவர்களுக்காக
என்னும்போது, இதை ஒரு நெறி சார்ந்த கேள்வியாக அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டதாகக் கொள்ளலாம்.
பழமொழி நானூற்றுப்பாடல்
ஒன்று இக்குறள் கருத்தை வழிமொழிவதை கீழுள்ள பாடலில் காணலாம்.
வினைப்பயன் ஒன்றின்றி
வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப
செய்யாமை வேண்டும்
புனம்பொன் அவிர்சுணங்கி
பூங்கொம்பர் அன்னாய்!
'
தனக்கின்னா இன்ன
பிறர்க்கு'.
பாரதவெண்பாப் பாடலொன்று இக்கருத்தை கேள்வியாகக் கேட்காமல், அறமென்று
வலியுறுத்துகிறது.
“இறப்ப நுமக்கடுத்த எவ்வநோய் யாவும்
பிறர்க்குமஃதாமென்று கொண்மின் - உறக்கருதி
எவ்வாறுமக்குறுதி யெண்ணுதீர்நீ ரெல்லார்க்கும்
அவ்வாறே யெண்ணல் அறம்”.
இன்று இதே கருத்தைச் சொல்ல இரண்டு குறள்கள். ஒரே பொருள்,
இரண்டுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இன்றெனது குறள்(கள்):
மாற்றார்செய்
துன்பவலி தானறிந்தப் பின்னொருவர்
ஆற்றுவதோ இன்னா பிறர்க்கு?
mARResei thunbavali thAnaRindha pinnOruvar
ARRuvadhO innA piRarkku
மாற்றார்செய் துன்பமின்னா வென்றறிந்த பின்னொருவர்
ஆற்றுவதேன் அஃதே பிறர்க்கு?
mARResei thunbaminnA venRaRindha pinnOruvar
ARRuvadhEn ahdhE piRarkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam