மார்ச் 04, 2013

குறளின் குரல் - 325


4th March 2013

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
                       (குறள் 317:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
enaiththAnum enjnjAnRum yArkkum manaththanAm
mANAsei yAmai thalai.

enaiththAnum – However small it is
enjnjAnRum – always,
yArkkum – for everyone
manaththanAm – whatever a person’s mind knows (as harmful to others)
mANA – that which is disgraceful, causing harm to others
seiyAmai thalai – not doing them is the primary virtue to practice.

In this verse, vaLLuavr puts an all-inclusive clause to seal someone from doing harm to others. He says, whatever be the size of harm, always, and to none, harm known to one’s heart as such, should never be done keeping that as the primary virtue to hold. One condition he has included here is, “whatever be the reason”.  The reason he says, “that which is known to mind as harm”, is because, what occurs in mind may eventually turn into action, as the mind is the breeding ground of all thoughts, good or bad.

Never, not of any measure, and to none and not even in thought
Ever think harm or hurt as that is the prime virtue in life to negate”

எனைத்தானும் - எவ்வளவாய் இருந்தாலும் (குறிப்பாக எவ்வளவு சிறியதானாலும்)
எஞ்ஞான்றும் - எப்போதும், எந்த காலத்திலும்
யார்க்கும் - எவருக்கும்
மனத்தானாம் - மனதோடு உளதாகின்ற
மாணா - மாணில்லாத, பிறர்க்குத் துன்பந்தரும் செயல்கள்
செய்யாமை தலை - செய்யாமலிருத்தலே முதலாய அறம்

யாருக்குமே, எந்த அளவில் (குறிப்பாக சிறியதாகவே) இருந்தாலும், எந்த நேரத்திலும், காலத்திலும், மனத்தளவில்கூட பிறர்க்கு இன்னலை விளைவிப்பவைகளைச் செய்யாமலிருப்பதே முதலாய அறம் என்பதே இக்குறளில் வள்ளுவர் சொல்லும் கருத்து. எளியார்க்கும், வலியார்க்கும், அவர்கள் ஓங்கியிருக்கும் நேரத்தும், தாழ்ந்திருந்த காலத்தும், பெரியதானாலும், சிறியதானாலும் மனத்தாலும் கூட துன்பம் நினையாமையைத்தான் முதன்மையான அறம் என்கிறார் வள்ளுவர். உள்ளத்தில் உள்ளலே செய்தலுக்கு தூண்டுகோலாயும் அமையுமாதலால்,  அவ்வாறு நினயாதலை இன்றியமையாததாகச் சொல்லுகிறார்.

இன்றெனது குறள்:
எக்காலும், எவ்வளவும், எவ்வுயிர்க்கும் எத்துன்பும்
மிக்கா மனங்கொளல் நன்று

ekkAlum evvaLavum evvuyirkkum eththunbum
mikkA managkoLal nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...