6th March 2013
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
(குறள்
319: இன்னாசெய்யாமை அதிகாரம்)
Transliteration:
piRarkkinnA muRpagal seyyin thamakkinnA
piRpagal thAmE varum
piRarkk(u) innA – When
harm to others
muRpagal seyyin – is
done previously
thamakk(u) innA – harm
to self
piRpagal – later on
thAmE varum – will befall on
its own.
Another often quoted verse; but
even the persons that quote can forget to bring this to practice.
The harm and pain inflicted
upon others previously will befall in equal or more measure to the persons that
cause, later in their life, is the simple principle explained in this verse,
This virtuous thought is repeatedly strewn around almost all the Indian literature
in some form or other to refrain people from indulging in harmful deeds towards
others from Sangam to subsequent Tamil literary works.
The question of whether it is
proper conduct to inflict harm to others is time and again asked in works such
as kaliththogai, and aRanerichchAram. Not as a point debating the
thought, but to nudge people to think what repercussion they may bring in
return. Exactly reflecting the theme of this verse, there are lines in Silappadikaram,
Pazhamozhi nAnURu. AuvvayAr’s konRai vEndhanh as the oft-used old
adage “ muRpagal seyyin piRpagal viLayum”. Similarly idioms
such as “You reap, what you sow” also imply the same.
Previously means, earlier in this birth as well as previous births.
Similarly, Later in life means, later in this birth or in subsequent births.
Both social and devotional lore of literary works repeatedly talk about this
thought in many contemplating contexts.
“The evil that harm is, if
inflicted to others earlier
Will revert in measure to the same person,
later”
தமிழிலே:
பிறர்க்(கு) இன்னா - மற்றவர்களுக்கு துன்பத்தை
முற்பகல் செய்யின் - முன்பு செய்தவருக்கு
தமக்கு இன்னா - அவருக்குத் துன்பம்
பிற்பகல் - பின்னர்
தாமே வரும் - தாமே வந்துறும்.
இந்த குறளின் கருத்தும் மிகவும் பேசப்படுகிற,
மேற்கோளாகச் சொல்லப்படுகிற ஒன்று, ஆனால் பெரும்பாலும், சொல்பவர்களே பழக்கத்தில் கொண்டுவர
மறந்துவிடுவதும் உண்டு!
ஒருவர் பிறர்க்கு முற்காலத்தில் செய்த துன்பமானது,
அவருக்கே தீம்பாய் பிற்காலத்தில் வந்துறும். இட்டார்க்கு இட்ட பயன் என்ற சொலவடை உண்டு. பிறர்க்கின்னா செய்தலைத் தீமையென்பதை கலித்தொகைப்
பாடல் வரி, “பிறர்கின்னா செய்வது நன்றாமோ மற்று” காட்டுகிறது. அறநெறிச் சாரப்பாடல்
வரியும், “பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை இல்லை” என்கிறது.
பழமொழி நானூற்றுப் பாடல், “முற்பகல் கண்டான் பிறன்கேடு
தன்கேடு பிற்பகல் கண்டுவிடும்” என்ற வரிகள், சிலப்பதிகாரத்தில் வரும், “முற்பகல் செய்தான்
பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியக் காண்” என்ற வரிகளை ஒத்திருப்பதைப்
பார்க்கலாம். அவ்வையாரின் கொன்றை வேந்தனில் வரும் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
என்ற வரிகளும், "வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்” என்னும்
பழமொழியும் சொல்லும் கருத்தும், இக்குறளின் கருத்து. சிலப்பதிகாரத்தின் மையக்கருத்தாகச்
சொல்லப்படும் மூன்று வரிகளில், “உழ்வினை உறுத்துவந்து ஊட்டும்” என்பதும் இக்கருத்தைச்
சொல்வதுதான்.
முன்னர் செய்தவை, இப்பிறவியிலே செய்தவை மட்டுமல்லாது,
முந்தைய பிறவிகளில் செய்யப்பட்டவையுமாம். பிற்பகல் என்பது முந்தைவினை இப்பிறப்பிலும்,
பின்வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வருவதையும், வரப்போவதையும் குறிப்பது.
வள்ளலார் பெருமான் இப்பிறப்பில் தான் நிந்தையுறும்
நோய்காட்பட்டதை எண்ணி வருந்திப் பாடுகையில், திருவொற்றியூரின் எழுத்தறியும் பெருமானாம்
சிவபிரானைக் குறித்துப்பாடுவது இக்குறளின் கருத்து கவிகளின் மனதில் ஆழமாகப் பதிந்து
இந்திய ஒழுக்கவியலின் ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்திருப்பதைக் காட்டுகிறது. அப்பாடல்:
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
(திருவருட்பா: 16:எழுத்தறியும் பெருமாள் மாலை, 723)
இன்றெனது குறள்:
முன்னம் ஒருவர்க்குச் செய்துன்பம் செய்தவர்க்கே
பின்னர் பெருந்துன்பா கும்
munnam oruvarkkuch cheithunbam seidhavarkkaE
pinnar perunthunbA gum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam