16th
February, 2013
31: (Non-irascibility
- வெகுளாமை)
[This
chapter is on not having anger and is done under the big heading of ascetic way
of life. Hence the chapter is focused more on penitents that lead austere life.
The verses not only point out situations where anger must be avoided and how it
can destroy the effect of penance for ascetics. There are specific characters
in Hindu purANic accounts such as DhuvarvAsa, ViswamithrA that have succubmbed
to rage and anger and have faced the wrath of the same. The powers attained
through penance are diminished or even lost everytime a penitent gets angered
for something or at somebody. Anger is borne out of presumed wrongdoing and
penitents, being the persons that must practice the virtues of compassion, must
be devoid or strive to be be without, anger]
[This
commentary was written on April 11, 2012, when I began doing this work of
commentary. So, I am re-presenting the same today, with its Tamil commentary]
One of
the things that we must truly be interested in, while reading this monumental work of
vaLLuvar (வள்ளுவர்), is to understand the thought behind the categorization of
these verses in certain chapters/division/sub-division. Was it done by him or
by later day commentators?
Today, we
are looking at the verse from the “veguLamai adikAram”(வெகுளாமை அதிகாரம்) in
the major division of “araththuppAl”(Dharma), sub-division, “thuRaviyal” (துறவறவியல்).
It is clear that vaLLuvar was very observant of the nature of the world; most of the
elevated virtues he has stipulated are mostly for the people that have chosen
austere path. It is very apparent that he did not expect the entire world to be
devoid of unreasonable anger as it is not practical.
Most of
us have read the story of “kongaNava rishi” irked by the bird’s waste dropping
on him, burning it to ashes by his very stern look, and subsequently going to
the village for his “picchai” (bhikshA/பிச்சை/ பிக்ஷாவந்தனம்). When the lady in
the house, he was standing before, took time to serve her husband and come a
little later to give konkaNavar the alms, konkaNavar was extremely angry that
he was kept waiting and gave a stern look at the lady, to which that chaste
lady, said, “Did you think, I am also like the poor innocent bird that
burnt in the forest?”. konkanavar was shell shocked wondering how she
could have known the episode and at once realized that the chaste women were
far above the petty anger of anyone, even by the person of high powers attained
through severe penance.
Anger has
its place in common life in many genuine cases and for right reasons; as an
example, people rising against the bad ruler, is just and right. Most of us
show it where it is convenient for us to show anger and the retaliation is
none. In places our anger has no value or respect or even would adversely
affect us, claiming that we applied restraint is laughable!
செல்லிடத்துக்
காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என்
காவாக்கா லென்?
(குறள் 301: வெகுளாமை அதிகாரம்)
Trasliteration:
chelliDaththuk kAppAn sinam kAppAn alliDaththu
kAkkin en? kAvAkkAl en?
chelliDaththuk – where
your power can mute the weak
kAppAn = being
restrained
sinam kAppAn
– is the one who knows how to control anger at the appropriate place.
allidathu – In
other places (like, anger before the powerful, injustice or where your anger
has no value or will cause you harm in retaliation!)
kAkkin
en? – boast that restraint was applied!
kavAkkAl
en? – or did not apply restraint, as if it would have mattered!
The last
word of this kurAl has a well-placed sarcasm, implying that there is no point
in being vainglorious and show off as if you had a choice!
In
another kuraL, in chapter “nIththAr perumai (நீத்தார் பெருமை – பாயிரவியல்), he
says,
“guNamennum
kunRERi ninRAr veguLi
kaNamEyum
kAththal aridhu”
While we
look at this later on in detail, this kuraL supports the thought that the
people of austere life that are at the pinnacle of virtuous character, cannot
hold their anger even for a second, even in those rare cases of instigated
anger they may get. In other words he implies it is impossible for them to get
angry in the first place and if they do, it will be gone in no time.
“True
restraint of anger is, where it can adversely affect
Vain
glorious can claim restraint where it has no effect”
செல்லிடத்துக் - எங்கு தன்னுடைய கோபத்துக்கு மற்றவர்கள் ஊமையாயிருப்பார்களோ
காப்பான் - அங்கு தன்னுடைய சினத்தைக் காக்கின்றவர்களே
சினங்காப்பான் - உண்மையில் சினத்தைக் காக்கின்றவர்களாவர்.
அல்லிடத்துக் - மற்ற இடங்களில், அதாவது தன்னுடைய கோபத்தைப் பொருட்படுத்தாவர்களிடையே,
அல்லது தாமே கோபமில்லாமல் ஊமையாகும் இடத்து
காக்கின் என்? - சினத்தை அடக்கினேன் என்ற வெற்றுப் பெருமைதான் ஏன்?
காவாக்காலென்? - கோபத்தை அடக்கவில்லை என்று சொல்வதும் ஏன்?
வள்ளுவரின் குறள் என்னும் வாழ்வியல் இலக்கியக்கடலைப் படிக்கும்போது,
இக்கேள்வி மீண்டும் மீண்டும் எழுவது இயற்கை. இயல், பால், அதிகார முறைமை வள்ளுவரே அமைத்ததா
அல்லது பின்னாளில் வந்த உரையாசிரியர்கள் யாரேனும் செய்ததா என்பதே அது.
அறத்துப்பாலின், துறவறவியலில் வரும் வெகுளாமை அதிகாரத்தின் வரும்
முதற்குறளை இன்று மீண்டும் பார்க்கிறோம்.
உலகோரின் இயல்புகள், மற்றும் வழக்குகளை நன்கு அறிந்த வள்ளுவர்,
மிகவும் உயர்ந்த அறவழிகளை துறவறத்தொழுகுவோருக்கே வேண்டிய நியதிகளாகச் சொல்லியிருக்கிறார்.
இவ்வதிகாரத்தை இல்லறவியலிலோ, மற்ற பால்களிலோ சொல்லாததிலிருந்து,
வெகுளாமை என்பதை எல்லோருக்கும் பொதுவாக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார் வள்ளுவர்.
நம்மில் பலரும்
கொங்கணவ முனிவர் தான் காலை சூரியவணக்கமும், காலை நிட்டையும் செய்யும் காலத்து, ஒரு
கொக்கின் எச்சம் தன்மேல் விழுந்ததற்காக அப்பறவையை தன்னுடைய பார்வையினாலேயே சாம்பலாக
எரித்தததையும், பின்பு தன்னுடைய அன்றைய உணவுத் தேவைக்காக அருகிலிருந்த கிராமத்தில்
ஒருவீட்டில் பிச்சைகேட்ட கதையைக் கேட்டிருப்போம். தன்கணவனின் தேவைகளை நிறைவு செய்துகொண்டிருந்த
அக்கற்புக்கரசி, பின்பு பிச்சையிட வந்தபோது, கொங்கணவர் சினந்து அவளை நோக்க, அவள் கேட்டது,
“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று.
கொங்கணவர் இம்மாதரசிக்கு எப்படி அந்நிகழ்ச்சி தெரிந்தது என்று அதிர்ந்தாலும்,
கற்பின் பெருமையை அறிந்துகொண்டதாகச் செல்லும் கதை.
சினம் மக்களின்
வாழ்க்கையில், தேவைப்படும் இடங்களில், சரியான காரணங்களுகாக இருக்கவேண்டிய ஒன்று. ஒரு
கொடுங்கோலனுக்கு எதிராக குடிகளின் சினம் தேவையானதே. முறையற்றவற்றை, நீதியற்றவற்றைக்கண்டு
கோபம் தேவை! எங்கு நம்முடைய கோபத்துக்கு எதிர்ப்பே
இருக்காதோ, அதாவது வலிமையில்லாதோரிடம் கோபப்படுவது நம்முடைய தற்பெருமைக்கு மட்டுமே
வழியாகும். எங்கு நம்முடைய கோபத்தைப் பொருட்படுத்த மாட்டார்களோ, அல்லது நம்முடைய கோபம்
நமக்கே தீங்காக முடியுமோ, அங்கு நான் கோபமேபடவில்லை என்பது வெற்றுப்பெருமையும், இயலாமையை
வெளிச்சம் போட்டுக்காட்டுவதுமாம். அதுவுமட்டுமல்லாது, பிறருடைய கேலி நகைப்புக்கும்
உரியதாம்.
இக்குறளின்
இறுதிச்சொல் வள்ளுவர், செல்லுபடியாகாத இடங்களில் சினத்தை அடக்கியதாகத் தற்பெருமை கொள்ளுபவர்களை
அழகாக நையாண்டி செய்கிறார்.
பாயிரவியலில்
நீத்தார் பெருமை அதிகாரத்தில், இக்குறளின் கருத்தையொட்டி, மற்றொரு குறள் சொல்லப்படுகிறது.
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.”
துறவறத்தில் இருப்பவர்கள் என்று சொல்லாவிட்டாலும், குணக்குன்றுகளாய்
விளங்குபவர்கள் சினந்தாலும், அச்சினத்தை ஒரு நொடியேனும் தக்கவைத்துக்கொள்வது இயலாது.
அவர்களின் அறப்பண்புகளின் வலிமை சினத்தை நொடியில் போக்கிவிடும் என்கிறார் வள்ளுவர்.
இன்றெனது குறள்:
கொள்ளற்க கோபம்
கொளலிடம் தேர்ந்தன்றி
எள்ளுதற்கே யாகும் வழி
koLLaRka kOpam koLaliDam thErndhanRi
eLLudhaRkE yAgum vazhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam